உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலி நிவாரணம் 10 லட்சம் டூ மச்

கள்ளச்சாராய பலி நிவாரணம் 10 லட்சம் டூ மச்

சென்னை : கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம்; இவ்வளவு தொகை எப்படி வழங்க முடியும்?' என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதை மறுபரிசீலனை செய்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு, அரசு தரப்புக்கு உத்தரவிட்டது.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 65 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், சிகிச்சை பெறுபவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 'வெல்பேர் பார்ட்டி' என்ற கட்சியின் மாநிலச் செயலர் முகமது கவுஸ் தாக்கல் செய்த மனு:கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல்; அவர்கள் மீது அரசு இரக்கம் கொள்ள தேவையில்லை. விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு தான் நிவாரணம் வழங்க வேண்டும்; சட்டவிரோத செயல்களை செய்பவர்களுக்கு வழங்கக் கூடாது. தீ விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் அல்லது வேறு விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, குறைவான இழப்பீடு தொகையை அரசு வழங்குகிறது. ஆனால், கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு அதிக தொகை வழங்கப்படுகிறது. எந்த அடிப்படையில் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லைஎனவே, கள்ளச்சாராயம் குடித்தவர்களை, பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது; அவர்களுக்கு இழப்பீடு மறுக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடிப்பவர்கள், நாட்டுக்காக உயிரை இழந்த சுதந்திரப் போராட்ட வீரர்களோ அல்லது மக்களுக்காக தியாகம் செய்த சமூக சேவகர்களோ அல்ல. அதனால், அரசு அறிவித்துள்ள இழப்பீட்டை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து, கடந்த மாதம் 20ம் தேதி அரசுக்கு மனு அனுப்பினேன்; பதிலும் இல்லை, நடவடிக்கையும் இல்லை. எனவே, இழப்பீடு வழங்கும் அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய முதல் பெஞ்ச் முன், மனு நேற்று விசாரணைக்கு வந்தது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுக்களோடு, இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கலாம் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்தனர். நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. இந்த மனுதாரர் கேட்டிருக்கும் விஷயமே வேறு என்பதால், இதை தனியாக விசாரிக்கப் போவதாக தெரிவித்தனர்.'கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம்; இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்?' என, அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 'அவர்களை ஏன் ஊக்குவிக்க வேண்டும்; 10 லட்சம் ரூபாய் என்பது அதிகம். விபத்தில் ஒருவர் இறந்தால், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கலாம். 'எனவே, நிவாரணம் குறித்த முடிவை மறுபரிசீலனை செய்வது குறித்து, அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்' என, அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Narayanan
ஜூலை 09, 2024 11:31

நீதிமன்றம் ஏன் வழ வழ கொழ கொழ என்று உத்திரவு இடுகிறது .? குடிகாரனுக்கு பணம் கொடுக்காதீர்கள் என்று தகிரியமாக சொல்ல முடியாதது அசிங்கம்


venugopal s
ஜூலை 06, 2024 22:36

அது மாநில அரசின் கொள்கை முடிவு. அதைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் உண்டா என்று பாருங்கள்!


பேசும் தமிழன்
ஜூலை 06, 2024 23:51

எவன் அப்பன் வீட்டு பணம்.... உதவாத நிதி தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.


vikram
ஜூலை 06, 2024 21:45

அவங்க அப்பன் விட்டு காசு இல்ல அதன் விட்டு அடிக்கரங்க


Senthil K
ஜூலை 06, 2024 20:17

என்ன.. புரியாத.. நீதிபதியாக இருக்குறாங்க... நாங்கள் கட்டிங் சரக்கு அடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு பிச்சை எடுக்கிறோம் தெரியுமா??? விலை கம்மியாக அரசாங்கம்.. மதுவை கொடுத்து இருந்தால்.. நாங்கள் ஏன் யா?? கள்ள சாராயம் வாங்கி குடிக்கப்போகிறோம்... நீதிபதிகள்.. நீங்கள் மட்டும்.. ஜானி வாக்கர்.. கம்பனி சரக்கு அடிக்கலாம்.. நாங்கள் குடிக்கக் கூடாதா?? எங்களுக்கு 10 லட்சம் என்பது குறைவான தொகையே.. 50 லட்சம் வேண்டும்...


theruvasagan
ஜூலை 06, 2024 17:40

சட்ட விரோத செயலுக்கு நிவாரணம் வழங்கறதே சட்ட விரோதம். அதுல இம்புட்டு எதுக்கு. இன்னும் குறைத்து கொடுக்கக் கூடாதான்னு என்ன கேள்வி. கொடுத்த காசு மக்களோட பணம். அதை திருப்பி வாங்கணும். அல்லது சம்பந்தப்பட்டவங்களிடம் இருந்து பறிமுதல் செய்து திருப்பிக் கட்டணும்னு உத்தரவு இல்ல போடணும்.


பேசும் தமிழன்
ஜூலை 06, 2024 17:08

நீதிமன்றம் பரிந்துரை செய்ய தேவையில்லை..... 10 லட்சம் பரிசு தொகை (அதை இழப்பீடு என்று கூற முடியாது) திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவிட்ட வேண்டும்.


skv srinivasankrishnaveni
ஜூலை 06, 2024 15:15

அநியாயம் அக்கிரமம் சாராயம் குடிச்சு அரசுப்பணத்துலே என்னாத்துக்கு THARANAM?????? அரசு தனது சொந்தகாசுலேந்து தரட்டும் ஒருபைசாகூட பெயராதுங்கோ மக்கள் அட்டும்வரிப்பணம்


அசோக் PB
ஜூலை 06, 2024 14:43

வழக்கு போட்டவருக்கும், குறைக்க சொன்ன நீதிபதிக்கும் முதலில் எனது நன்றிகள். குடிச்சு செத்தவனுக்கு எதற்கு செத்தவனுக்கு எதற்கு பணம்.. அப்படியே கொடுத்தாலும், 10லட்சம் என்பது மிக மிக அதிகம்.. அதையும் சாராயம் வித்து சம்பாரிப்பவர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கலாம்.


Shankar
ஜூலை 06, 2024 14:16

ஆரம்பத்தில் சாவு எண்ணிக்கை குறைவாக இருந்தபோது அறிவித்த இந்த பத்துலட்சம் ரூபாய் தற்போது சாவு எண்ணிக்கை அதிகமாகும்போது அரசாங்கத்திற்கு இழப்பீடும் அதிகமாவதால் திமுகவினரே கட்சியின் மேலிடத்தின் பேரில் இந்த வழக்கை தொடர்ந்திருப்பார்களோ என்று தோன்றுகிறது.


Yaro Oruvan
ஜூலை 06, 2024 14:04

அது வந்து ம்ம் ஹா ம்ம் அவர் ஓனர் சாரி யுவர் ஓனர்.. சாரி ஆனர்.. என்ன இன்னக்கி ரொம்ப ஜாம் ஆவுது .. வெளங்காதவணுவாகிட்ட ஆட்ச்சிய கொடுத்தா வெளங்காதததான் செய்வானுவ உவர் ஓனர்..சாரி ஆனர் ..


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி