உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ஆதாரமுமின்றி ஒரு அப்பாவியை அடித்துக் கொன்ற போலீசார், பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் அடையாளங்கள் தெரிந்தும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன்? என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை; கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் பத்து வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் குறித்த சி.சி.டி.வி., காட்சிகள் இருந்தும் இதுவரை குற்றவாளியைக் கைது செய்யாத போலீசாருக்கு எனது கடும் கண்டனங்கள்! சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை நோட்டம் விட்டுக் கொண்டே பின்னால் சென்ற அந்தக் கயவன், கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியின் வாயைப் பொத்தி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ஆதாரமுமின்றி ஒரு அப்பாவியை அடித்துக் கொன்ற தமிழக போலீசார், பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் அடையாளங்கள் தெரிந்தும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன்?சிறுமியின் சார்பாக தி.மு.க., பிரமுகர் யாராவது தலையிட்டால் மட்டும் தான் தகுந்த விசாரணை நடக்குமா? கடந்த நான்காண்டுகளாக போலீசார் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் முற்றிலுமாக இழந்துள்ள நிலையில், காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்கால் குற்றவாளிகளுக்கும் குளிர்விட்டுப் போய் விடாதா? மக்களின் குறைகளைத் தேடிச் சென்று தீர்க்கப்போகிறேன் என ஊர் ஊராக விளம்பர நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் நிர்வாகச் சீர்கேட்டை எப்போது தான் சரிசெய்வார்?, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராஜா
ஜூலை 18, 2025 11:49

சாராயம் விற்பனை அமோகம் போல இங்க கருத்து சொல்ல வந்துட்டார்


Padmasridharan
ஜூலை 18, 2025 05:21

அப்பொழுது, அங்கே பாதிக்கப்பட்டது சிறுமி இப்பொழுது, இங்கே பாதிக்கப்பட்டது பெண்.. இரண்டு இடத்திலும் பணம் எவ்வளவு தேறுமென்று காக்கி சட்டை அதிகார பிச்சைக்காரர்கள் முதலில் கணக்கு போடுவது அதைத்தான். . அதற்கேற்றேர் மாதிரி என்ன தவறு என்று பார்த்து தண்டிப்பதை விட யார் தவறு செய்தார் என்று பார்த்துதான் பஞ்சாயத்து நடத்துகின்றனர்.


Mario
ஜூலை 17, 2025 18:08

தேர்தலின் போது சிக்கிய ரூ.4 கோடி ‘ஹவாலா’ பணம் பாஜக நிர்வாகி கைமாற்றியதாக கோர்ட்டில் சிபிசிஐடி தகவல்.


D.Ambujavalli
ஜூலை 17, 2025 16:33

அந்த சிறுமி இதுவரை உயிரோடிருந்தால் பெற்றவர்களிடம் கூறி, அவர்கள் மருத்துவ சான்று பெற்று, அந்த ‘சார்’ யாரென்று கண்டுபிடித்து, அவரை காபந்து பண்ணி, எல்லாம் முடிந்த பிறகு, அந்தப் பெண்ணையும், பெற்றோரையும் போலீசில் அழைத்து அவமானப்படுத்தாமல் அவ்வளவு வேகமாக கைது எல்லாம் கண்டபடி செய்வார்களா?


Sivagiri
ஜூலை 17, 2025 16:07

திருட்டு மாடல் :- அங்கே ஒன்றும் வன்கொடுமை நடக்கவில்லை , அது சிறுமியே அல்ல , சிறுவன் நடக்க முடியாமல் இருந்ததால் தோளில் தூக்கி சென்றார் அந்த தம்பி . ..


Sampath
ஜூலை 17, 2025 16:02

செய்தவன் டி ம் கே ஒட அல்ல க்கை.


raja
ஜூலை 17, 2025 14:46

என்னைக்கு இந்த ஸ்டாலின் தலைமையில் ஆன திராவிட மாடல் அரசு " சார்" களை கைது பண்ணி இருக்கு...புரிஞ்சவன் புத்திசாலி... புரியாதவன் கட்டு மர உடன் பிறப்பு....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 17, 2025 14:31

அந்த சிறுமியின் மீது ஏதாவது சொல்லும் படி தவறு ஒன்றை கண்டுபிடிக்க திமுக வக்கீல் அணி முயற்சி செய்து கொண்டு இருக்கலாம். அதை கலெக்டர் அல்லது எஸ்பியை வைத்து சொல்ல வைக்கலாம். ஆகவே அது வரை பொதுஜனம் அமைதி காக்க வேண்டும். அதன் பின்னர் குற்றவாளியை பிடித்து சரியான சாட்சிகள் இல்லை அல்லது சாட்சிகள் பத்தாது என்று கூறி கோர்ட் மூலம் விடுவிக்கலாம். சார் கள் மிகவும் பிஸியாக தேர்தல் வேலை பார்ப்பதால் கூட விசாரணையில் தொய்வு இருக்கலாம். திமுக திக விசிக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் போன்ற திராவிட கட்சிகள் அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை காப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது. சட்ட புத்தகத்தை மட்டும் கையில் வைத்திருப்பார்கள். ஆனால் அந்த சட்டம் அவர்களை கட்டுப்படுத்தாது. ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி கண்ணே கதை தான்.


suresh guptha
ஜூலை 17, 2025 13:46

WHO SAID CRIME OCCURED,HE WAS FOLLOWING THATS ALL,WE HAVE TO GET CLEARENCE FROM OUR PARTY LEADERS TO ARREST OR NOT,THEY MAY SEND SOMEBODY TO SETTLE THE ISSUE,WHY R U ASKING ALL THIS,OUR CM IS WITH US


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 17, 2025 14:07

சூப்பர் ...


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 17, 2025 15:40

குற்றம் நடக்கவில்லை என்று உபிஸ் சொல்வதைவிட கழக காவல் அணித்தலைவர் சொல்லிவிட்டால் போதும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 17, 2025 13:10

யாரை கைது செய்யவேண்டும் என்று குன்றிய நாட்டில் சங்கிகள் எங்களுக்கு அறிவுரை கூறவேண்டாம். நாங்கள் நிகிதாவையே கைது செய்யவில்லையே. அஜீத்தை கைது செய்தோமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை