உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீப திருவிழா 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீப திருவிழா 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தீப திருவிழாவையொட்டி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணா மலைக்கு, 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா டிச., 13ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், கடலுார், சிதம்பரம், கும்பகோணம், வேலுார், விழுப்புரம், அரியலுார், பெரம்பூர், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, விருத்தாசலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு, 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.சென்னையில் இருந்து மட்டும், 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளோம். சிறப்பு பஸ்களை இயக்கம், தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்ட ஏற்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 26, 2024 13:13

அதிக பஸ் விட்டால் மட்டும் போதாது. அவைகள் நிற்கும் இடம் சுத்தமாக, தண்ணீர் தேங்காமல், சேறு சகதி இல்லாமல் காய்ந்த இடத்தில் பஸ்களை நிறுத்தவேண்டும். பஸ்கள் வரிசையில் வந்து பயணிகளை இறக்கிவிட்டு, வரிசையில் அழைத்துச்செல்லவேண்டும். வொவொரு முறையும் நான் பார்க்கிறேன், மக்கள் சேரிலும், சகதியிலும் அவதிப்பட்டு, பஸ்களை தேடி அங்கும் இங்கும் ஓடி அலைந்து மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் போதிய கழிவறைகள் அங்கே இருப்பதில்லை. குடிநீர் வசதி இல்லை. இரவு நேரத்தில் பயணிகள் பஸ்களின் பின்னேயே எல்லாம் செய்கிறார்கள். மிகுந்த நாற்றம். மிகுந்த சுகாதாரக்கேடு.


முக்கிய வீடியோ