உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 10,000 பேர் மீட்பு பணிக்கு தயார்

சென்னையில் 10,000 பேர் மீட்பு பணிக்கு தயார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின், அவர் கூறியதாவது:கடந்தாண்டு மழை வெள்ளம் தேங்கியதால், பல இடங்களில், உணவு, பால், பால் பவுடர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, அப்பகுதியில் உள்ள பேரிடர் மீட்பு மையங்களில் முன்கூட்டியே, அவற்றை இருப்பு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நீர்நிலைகள் தொடர்ச்சியாக கண்காணிப்பில் உள்ளன. நீர்நிலைகளுக்கு வரும் உபரிநீரை பாதுகாப்பாக அப்படியே வெளியேற்ற, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் 10 செ.மீ., குறையாமல் மழை பெய்யும். சில இடங்களில் 20 செ.மீ., மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எங்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது; எங்கு மின்தடை ஏற்பட்டுள்ளது என்ற விபரங்களை கண்காணிக்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியும். மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், 24 மணி நேரமும் அதிகாரிகள் இருப்பர்.பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. துறைகளில் உள்ள நிதிகளை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்படும் பட்சத்தில் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்ய, முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார். சென்னையில் 10,000 பேரும், தமிழகம் முழுதும் 65,000 தன்னார்வலர்களும், மீட்புப் பணிகளில் ஈடுபடத் தயாராகவுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Lion Drsekar
அக் 14, 2024 13:27

அப்போ இந்த ஆர் எஸ் எஸ் மற்றும் இதர சமூக அமைப்பினர்களுக்கு அந்த அளவுக்கு வேலை இருக்காது , அவர்கள் உணவு வழங்குவது மற்றும் குடிநீர் வழங்குதல் என்று அதில் கவனம் செலுத்தலாம் வந்தே மாதரம்


ராமகிருஷ்ணன்
அக் 14, 2024 03:14

ரெயின் கோட், முழுங்கால் அளவு ரப்பர் ஷூ, போட்டு கிட்டு 2 பேரும் உலா வந்து போட்டோ சூட் இந்த வருடமும் நடத்த உள்ளனர். அல்லக்கை ஊடகங்கள் பில்டப் கொடுக்க ரெடியா இருக்குது. இதுக்கு மேல என்ன வேணும்.


Rajarajan
அக் 13, 2024 10:57

சென்னை மேயர் அறிக்கை என்னவாக இருக்கும் ?? நம்ம சென்னைல ரெய்ன்பால் ரொம்ப ஹெவியா இருந்திச்சி. ஆனா மக்கல் எல்லாம் ரொம்ப சபர் ஆகாம, நம்ம கார்பொரேஷன் காப்பாத்தாச்சி. அடுத்த ரெயின்பால்ல, சென்னை ரெயின்வாட்டர் திட்டத்துக்கு அரசு பல ஆயிரம் கோடி கடன் வாங்க போகுது. ஒன்றிய கவர்மெண்ட் பண்ட்ஸ் தராம ஏமாத்திச்சி. அதான் இவ்ளோ ரெயின்வாட்டர் சென்னைல வந்திச்சி. சென்னை மக்கல் எல்லாரும், ஹாப்பியா இருந்திச்சி.


pandit
அக் 13, 2024 09:54

30000 கோடியுடன் 4000 கோடி சேர்ந்துவிட்டதோ???


raja
அக் 13, 2024 09:27

ஆக 4000 கோடி மழை வடிநீர் வாய்காலுக்கு விடியல் அரசு ஒதுக்கியதை ஒன்கொள் கோவால் புற கொள்ளையர் குடும்பம் ஒதுக்கி விட்டது தெள்ள தெளிவாகி விட்டது.....


Va.sri.nrusimaan Srinivasan
அக் 13, 2024 08:03

நல்ல படியா வேலை பார்த்து காப்பாற்றுங்க


Narayanan Sa
அக் 13, 2024 08:01

துறைகளில் எத்தனை கோடி நிதி இருக்கிறது. உதாரணமாக பள்ளி கல்வி துறையில் நிதி இல்லாததால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வில்லை. பொது பணி துறையில் நிதி இல்லாததால் சாலைகள் பராமரிக்க படவில்லை. அப்படி இருக்க எந்த துறையில் இருந்து எவ்வளவு நிதி கிடைக்கும். எல்லாம் சொதப்பல் தான்.


Svs Yaadum oore
அக் 13, 2024 07:14

....சென்னை முழுக்க குண்டு குழியுமாக ரோடுகள் வெட்டி படு மோசமான நிலைமை ....எத்தனை ஆயிரம் கோடிகள் செலவு செய்தாலும் நகரத்தில் சாலைகள் நீர் தேங்காமல் வடிய எந்த வழிமுறையும் கிடையாது ....எல்லாம் லஞ்ச ஊழல் கொள்ளை ...நகரம் தண்ணீரில் மிதந்தால் அதற்கு பிறகு மீட்பு பணிகளுக்கு சென்னையில் 10,000 நபர்களாம்.....ஆலந்தூரில் சாலையில் தேங்கிய கழிவு நீரில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஐடி ஊழியர் வழுக்கி விழுந்த போது அவ்வழியாக வந்த லாரி டயரில் சிக்கி தலை சிதைந்து பலி....தலை சிதைந்து அவர் உயிரிழந்த காரணத்தினால் அவரது தலைக்கு பதில் அந்த இடத்தில் வெள்ளை பூசணிக்காயை வைத்து அதன் மேல் அவரது புகைப்படத்தை வைத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்தார்களாம் .....படு கேவலமான ஆட்சி நடக்குது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை