உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 108 ஆம்புலன்ஸ் சேவை; தீபாவளிக்கு 7,463 பேர் பயன்

108 ஆம்புலன்ஸ் சேவை; தீபாவளிக்கு 7,463 பேர் பயன்

சென்னை: தமிழகம் முழுதும் வழக்கமான நாட்களை விட, தீபாவளி அன்று, 48 சதவீதம் பயனாளிகள், கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வழியே பயன்பெற்றுள்ளனர். தீபாவளி அன்று பொதுமக்களுக்கு உதவுவதற்காக, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மக்கள் அவசர காலத்திற்கு அழைக்கும், 108, 104, 102 அவசர கால பதில் அளிப்பு மையங்கள், கடந்த 19ம் தேதி முதல் மூன்று ஷிப்ட் ஊழியர்களுடன், முழுமையாக செயல்பட்டன. வழக்கமான நாட்களில், 5,051 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவை பெற்று பயனடைவர். தீபாவளி அன்று 7,463 பேர் பயன்பெற்றுள்ளனர். அதாவது, வழக்கமான நாட்களை விட, 48 சதவீதம் பேர் கூடுதலாக பயன்பெற்றுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை பெற்றவர்கள் விபரம் பாதிப்பு சாதாரண நாள் பயனாளிகள் தீபாவளி அன்று பயன்பெற்றவர்கள் சதவீதத்தில் வித்தியாசம் தீக்காயம் 26 261 904 அடிதடி காயம் 197 808 310 வாகன விபத்து 835 2,578 209 வாகனமில்லா மற்ற விபத்துகள் 337 657 95 விபத்து மற்றும் விஷம் பாதிப்பு 172 222 29 தற்கொலை முயற்சி 46 46 0 நினைவிழந்தவர்கள் 197 450 128 மூச்சு திணறல் 321 391 22 மனநிலை பாதிப்பு 12 2 83 இதர பாதிப்பு 2,908 2,048 30 மொத்தம் 5,051 7,463 48


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ