மேலும் செய்திகள்
தங்கம் விலை இன்று சரிவு; சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1920 குறைவு
33 minutes ago
இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள்: பா.ஜ., நியமனம்
4 hour(s) ago | 3
இளையராஜா சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரி சரிகம நிறுவனம் வழக்கு
5 hour(s) ago | 13
சென்னை: 10ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 10) காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22 வரையில் பொதுத்தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பொதுத்தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்தது. இதற்கிடையே மே 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.இந்த நிலையில் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 10) காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை, https://www.tnresults.nic.in/ என்ற இணையதளத்தில், தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
33 minutes ago
4 hour(s) ago | 3
5 hour(s) ago | 13