உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை: நெல்லையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், பள்ளி பஸ்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது. வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால், மாணவன், பள்ளிக்கு வரும் போது, பூச்சி மருந்து சாப்பிட்ட நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=svjf97gl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவன் உடலை வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவன் பயின்ற பள்ளியின் இரு பஸ்கள் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால், இரு பஸ்களும் தீக்கிரையாகின. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவன் தற்கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியும் அளித்தனர். இதனால், அவர்கள் கலைந்து சென்றனர். வீரவநல்லூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

RAMALINGAM.M
ஜூலை 18, 2025 15:09

ஆசிரியர்களும் கண்டிக்கக் கூடாது பெற்றவர்களும் கண்டிக்க மாட்டார்கள் மாணவன் என்ன செய்தாலும் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று அரசும் சில வேலைகளில் நினைக்கிறது. இதன் வெளிப்பாடு இம்மாதிரியான நிகழ்வுகள்....


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 18, 2025 12:37

நம்ம நைனா ஒரு போன் போட்டு இங்கிலீசுல சாரி சொல்லி நலம் விசாரிச்சு மும்மொளி திட்டத்தை நிறைவேத்திடுவாரு


Nagarajan D
ஜூலை 18, 2025 12:31

சரி உடனே கல்வி நிலையங்களை மூடிவிடலாமா? மாணவர்களை தண்டிக்கும் உரிமை ஆசிரியர்களிடமிருக்கும் வரை எல்லாம் நன்றாக தான் இருந்தது.. அது தடுக்கப்பட்ட உடன் தற்போது இது போன்ற சம்பவங்களும் போதையில் தள்ளாடும் பள்ளி மாணவர்களையும் இதில் மாணவிகளும் அடக்கம் தினமும் காணும் அவலம் நேர்கிறது


Kannan Chandran
ஜூலை 18, 2025 11:30

நீட் தற்கொலைக்கு காரணமாக நீட் எதிர்ப்பு என கூவும் கூமுட்டைகள் இனி பெற்றோர் எதிர்ப்பு என புதுவித கூவு கூவுவார்கள்..


Sudha
ஜூலை 18, 2025 11:27

மாணவன் செய்த காரியம் நீதி மன்றத்தில் சொல்லப்பட வேண்டும். அது கண்டனத்திற்குரியதாக பட்சத்தில் கல்வி அமைச்சகத்தின் தலையிட வேண்டும். பள்ளிகள் பெற்றோரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸாப்ப் கட்டாய படுத்த வேண்டும். தற்கொலையும் தீவைப்பும் சொன்ன மீடியா, பள்ளியின் தரப்பையும் வெளியிடுவது அவசியம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 18, 2025 11:25

காட்டாட்சி நடப்பதுபோல் தெரியுது ...... இதுவா விடியல் ன்னு மொதல்ல கோல்மால்புரத்தில் வண்டி கழுவுற அடிமைஸ் யோசிக்கணும் ......


Sampath
ஜூலை 18, 2025 11:08

ஆசிரியர்களும் கண்டிக்க கூடாது . மாணவர்களும் படிக்க மாட்டார்கள் . எல்லோரும் டாக்டர் என்ஜினீயர் ஆக வேண்டும் . பெட்றோ ரும் கண்டிக்க மாட்டார்கள் கண்ணடிக்க விடவும் மாட்டார்கள். நாடு நாசம்தான். லாலி மிட்டசி வாங்கி கொடுத்து பிள்ளைகளை பேசாமல் தெருவில் விட்டுவிடுங்கள் சோறு மட்டும் பசிக்கும் போது போட்டு விடுங்கள். உலகம் எங்கேயோ போகிறது. நாம் இங்கே இருப்போம்


அப்பாவி
ஜூலை 18, 2025 11:02

அந்தப் பையனை ஒழுங்கா ஒரு அரசுப் பள்ளியில் சேத்திருக்கலாம். படிப்பு வராத தத்தியை தனியார் ஸ்கூலில் சேத்துட்டாலே பெரிய விஞ்ஞானியா, டாக்டரா வந்துருவான்னு பேராசைப் பட்டா?


Mohanakrishnan
ஜூலை 18, 2025 10:32

Thirutuu models never reveal the school name or the management


sridhar
ஜூலை 18, 2025 09:54

சட்டம் ஒழுங்கு என்று ஒன்றுமே இல்லை . கேடுகெட்ட ஆட்சி நடக்கிறது . தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து maanam கெட்டவர்கள் வாக்குகளை வாங்கி மீண்டும் தொடரலாம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை