உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11 நாள் டீ, காபிக்கு ரூ.27 லட்சம் செலவா?: கோவை மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி

11 நாள் டீ, காபிக்கு ரூ.27 லட்சம் செலவா?: கோவை மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயை அணைப்பதற்கான கணக்குகள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதில் மொத்த செலவு ரூ.76,70,318 எனவும், டீ காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவு என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cdr5qkz5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடம் அருகே கடந்த ஏப்.,6 முதல் ஏப்.,17 வரை தீப்பற்றியது. அப்போது, விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது. அதன்படி, காட்டப்பட்டுள்ள செலவுக்கணக்கில் மொத்த செலவு ரூ.76,70,318 எனவும், டீ காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவு என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. வெறும், டீ, காபி, உணவுகளுக்கு ரூ.27 லட்சம் செலவு கணக்கு காட்டப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காட்டப்பட்ட செலவின விபரம்

உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் - ரூ. 27,51,678டீசல், பெட்ரோல், கீரிஸ் ஆயில் - ரூ. 18,29,731காலணிகள் - ரூ. 52,348முகக்கவசம் - ரூ. 1,82,900பொக்லைன் மற்றும் லாரி வாடகை - ரூ. 23,48,661தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி மற்றும் தனியார் வாகனம்) - ரூ. 5,05,000மொத்த செலவு - ரூ. 76,70,318


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Guru Rajan
ஜூலை 26, 2024 21:41

யானைக்கு அல்வா போட்டக்கணக்கு புலிக்கு புல்லு போட்டகணக்கு சந்திரலேகா என்றபடத்தில் சொன்ன கணக்கை போன்ற கண்ணக்குத்தான் இதுவும்


N Sasikumar Yadhav
ஜூலை 26, 2024 20:50

எதில் எங்கு எப்படி ஆட்டய போட முடியுமோ அப்படியெல்லாம் ஆட்டய போடுவதுதான் திருட்டு திராவிட மாடல் . ஓசியும் இலவசமும் கொடுத்து ஓட்டுவாங்குவது இதுபோல சம்பாதிக்கதான் . நமக்குதான் புரிவதில்லை


Premanathan Sambandam
ஜூலை 26, 2024 20:17

செலவு கணக்கு okay. தணிக்கை குழு ஏற்றுக்கொண்டதா?


Nandakumar Naidu.
ஜூலை 26, 2024 18:36

இவர்களுக்கு வாக்களித்த ஹிந்துக்கள் 2026 தேர்தலில் திருந்துவார்களா இல்லை பணத்திற்கும், பிரியாணிக்கும், குவாட்டருக்கும் அலைவார்களா? மற்ற மதத்தினர் திமுக விர்க்குத்தான் வாக்களிப்பார்கள். அவர்களைப்பற்றி பேசி பலன் இல்லை.


senthil vel
ஜூலை 26, 2024 18:23

சூப்பர் சார் வெரி ஹாப்பி ?


sridhar
ஜூலை 26, 2024 17:29

இதை விட குறைவாக ஊழல் செய்தால் கட்சிக்கே கேவலம், ஒரே கையெழுத்தில் 1.76 லட்சம் கோடி சுருட்டியவர்கள் இவர்கள் ..


Swaminathan L
ஜூலை 26, 2024 17:20

சம்பந்தப்பட்டவர்களுக்கு தீ சீக்கிரமாகவே அணைந்து விட்ட வருத்தம் இருந்தாலும் ஆச்சரியமில்லை.


என்றும் இந்தியன்
ஜூலை 26, 2024 17:10

11 நாளில் டீ காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவு. டீ + உணவு சராசரி ரூ 100 என்றே வைத்துக்கொண்டாலும் 11 நாளில் 2,75,167மக்களுக்கான செலவு ஒரு நாளில் 25,000 மக்களுக்கான செலவு


ananthu
ஜூலை 26, 2024 17:03

All Expenses shown are so expensive only how face mask - will be bought for 1 Lakh all other also very very high


Balasubramanian
ஜூலை 26, 2024 17:00

டீ காபி செலவுக்கு பில்லு தேவை இல்லை, வவுச்சரில் கையெழுத்து போட்டால் போதும் என்று யாராவது சொல்லி இருப்பார்களோ?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி