உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்

11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 17 வயது 11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் கோவில் விழாவிற்கு, 17 வயது 11ம் வகுப்பு மாணவன் சென்று இருந்தான். அங்கு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் சந்துரு தப்பி ஓட்டம் பிடித்தார்.இவரை கூடங்குளத்தில் வைத்து கன்னியாகுமரி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவின் போது எந்த ஊர் என்ற பிரச்னையில் பரஸ்பரம் வாக்குவாதம் ஏற்பட்டு கொலையில் முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

morlot
ஏப் 28, 2025 15:42

The same thing happened at paris yesterday. A school boy murdered another girl student. Now youngsters are very violent.Because there is no discipline and parents gave too much liberty and chellam today to their children. Also teachers are not allowed to scold or make use of their cane to give punishment. This is new generation kaliyugam


raja
ஏப் 28, 2025 13:43

பெரும்பாலும் ஓட்டுனர்கள் ஆயுதங்களுடன் செல்லவேண்டிய ஆழ்நிலை தான் இங்கு உள்ளது. இது ஓட்டுனர்களின் தவறு இல்லை சட்டம் ஒழுங்கு காவல்துறை சரியாக இல்லை. இதையெல்லாம் கையில் வைத்திருக்கும் அமைச்சர் சாராய விற்பனையிலும் ஒப்பந்த கமிஷன்களை சரிபார்ப்பதற்கே நேரம் போதவில்லை அவர் என்ன செய்வார்.


Mecca Shivan
ஏப் 28, 2025 21:48

சந்தடி சாக்கில் ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லோரும் நல்லவர்கள் போல கதைவிடக்கூடாது ..பெருமபாலான ஆட்டோ ஓட்டுனர்கள் பேராசை மற்றும் திமிர் பிடித்தவர்கள்தான் .. மீட்டர் போடுவது கிடையாது .. ஓலா உபேர் ஓட்டினால் கூட மீட்டருக்கு மேல் காசு கேட்பது .. அதிவேகம் இல்லயென்றால் மற்ற வண்டிகளுக்கு வழிவிடாமல் உருட்டுவது , பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோவை நிறுத்துவது , ஆடோஸ்டாண்டில் சாலை திருப்பம் சாலை மீது என்று வண்டியை நிறுத்து அடாவடி செய்வது .. இரவில் ஏன் பகலில் கூட ஆட்டோவை பாராக மாற்றி சரக்கு அடிப்பது, CITU DMK மற்றும் உதிரிக்கட்சிகளின் கொடிகளை வைத்து அடாவடி சங்கம் நடத்துவது என்று எங்கு நோக்கினும் பொறுக்கித்தனம்தான் நிரம்பியுள்ளது


Ramesh Sargam
ஏப் 28, 2025 12:52

தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் மாணவர்கள் குற்ற செயலில் தினம் தினம் ஈடுபடுவது மிகவும் வருத்தத்தை ஏட்படுத்துகிறது. மாணவர்களை பெற்ற பெற்றோர்கள் வளர்ப்பு சரியில்லை என்பது முதல் காரணம். பள்ளிகளில், பள்ளி ஆசிரியர்கள் அவர்களை சரியாக கண்காணிப்பதில்லை, இது இரண்டாவது காரணம். குற்றம் புரியும் மாணவர்களை காவல்துறை அதிகாரிகள் அழைத்து அறிவுரை கூறவேண்டும். அப்படி கூறுவதில்லை. இது மூன்றாவது காரணம். எல்லாவற்றிற்கும் மேலாக திமுக அரசு சரியில்லை. இது முழுமுதற்கரணம். ஆட்சி சரியாக இருந்தால், இப்படி மாணவர்கள் குற்றம் புரிய வாய்ப்பில்லை.


புதிய வீடியோ