இலங்கைக்கு கடத்த முயன்ற1200 கிலோ பீடி இலை பறிமுதல்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கடலோரத்தில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ பீடி இலைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். உச்சிப்புளி அருகே உள்ள கடலோர பகுதியான ஆற்றங்கரை கிராமத்தில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணி மேற்கொண்டனர். தோப்புவலசை கடற்கரையில் இரவு 9:30 மணிக்கு சோதனை செய்த போது அங்கு சந்தேகப்படும் வகையில் தனியாக ஒரு நாட்டுப்படகு நங்கூரமிட்டிருந்தது.அதில் சோதனை செய்த போது 41 கருப்புநிற பண்டல்களில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலை இலங்கைக்கு கடத்தி செல்ல தயார் நிலையில் இருந்தது தெரியவந்தது. படகையும், பீடி இலையையும் போலீசார் பறிமுதல் செய்த போலீசார் படகின் உரிமையாளர், கடத்தல்காரர்களை தேடுகின்றனர்.