உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரயில் பாதைகள் அருகே 12,480 கி.மீ., துாரத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பு

 ரயில் பாதைகள் அருகே 12,480 கி.மீ., துாரத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பு

சென்னை: ரயில் பாதைகளை, பொது மக்கள், கால்நடைகள் கடந்து செல்வதை தடுக்க, நாடு முழுதும் ரயில்வேயில், 12,480 கி.மீ., துாரம் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது :

நாடு முழுதும், 1.32 லட்சம் கி.மீ., துாரம் ரயில் பாதைகள் உள்ளன. இதில், 1.09 லட்சம் கி.மீ., துாரம் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங் களாக உள்ளன. முக்கிய வழித்தடங்களில் ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காக, தண்டவாளத்தை பயணியர், கால் நடைகள் கடந்து செல்வதை தடுக்கும் வகையில், தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. நாடு முழுதும் இதுவரை, ரயில் பாதைகளில் யாரும் குறுக்கே செல்ல முடியாதபடி, 12,480 கி.மீ., துாரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
டிச 09, 2025 13:11

அந்த சுற்றுச்சுவரை ஒருபக்கம் தடுப்புசுவராக மாற்றி, அரசியல் கட்சியினர், ரவுடிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மற்ற மூன்று பக்கங்களிலும் சுவர் எழுப்பி, கதவு போட்டு தண்டவாளங்கள் அருகில் உள்ள இடத்தை ஆட்டைப்போட்டு கள்ளுக்கடை, சூதாட்டம் செய்ய இடம் என்று மாற்றிவிடப்போகிறார்கள். அந்த சுற்றுச்சுவர் அருகில் ஒரு km தூரத்திற்கு எந்தவித கட்டுமானப்பணியும் வரவிடாமல் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் கண்காணிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை