உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்

சென்னை: வேலூர் எஸ்பி மயில்வாகனன் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கும்பகோணம் ஏஎஸ்பி அங்கித் சிங் - எஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று சேலம் வடக்கு துணை கமிஷனர் ஆகவும்பொள்ளாச்சி ஏஎஸ்பி சிருஷ்டி சிங்- எஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி தெற்கு போலீஸ் கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி ராஜேஸ்வரி - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி ஆகவும்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி கயல்விழி-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி ஆகவும்காத்திருப்பு பட்டியலில் இருந்த ரம்யா பாரதி- சென்னை குற்றப்பிரிவு ஐஜி ஆகவும்சேலம் வடக்கு துணை கமிஷனர் சிவராமன் - வேலூர் எஸ்பி ஆகவும்வேலூர் எஸ்பி மயில்வாகனன்- சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு எஸ்பி ஆகவும்திருச்சி தெற்கு துணை கமிஷனர் டி. ஈஸ்வரன் - ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஆகவும்ரயில்வே எஸ்பி ஐ. ஈஸ்வரன்- கோயம்பேடு துணை கமிஷனர் ஆகவும்கோயம்பேடு துணை கமிஷனர் சுஜித் குமார் - சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும்சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் சுஹாசினி - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பி ஆகவும்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பி நாகஜோதி - போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பி/ முதல்வர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !