மேலும் செய்திகள்
விமான நிலையத்துக்கு கூடுதல் பஸ் வேண்டும்!
31-Oct-2024
சென்னை: அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து பயணித்தோருக்கு, 50,000 ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ், பரிசு பெற குலுக்கல் முறையில், 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு விரைவு பஸ்களில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்க, விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மூன்று பேருக்கு தலா 10,000 ரூபாய் வழங்கும் திட்டம், இந்தாண்டு ஜனவரி முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், மேலும் 10 பேருக்கு, தலா 2,000 ரூபாய், ஜூன் முதல் வழங்கப்படுகிறது. கடந்த மாதத்துக்கான 13 வெற்றியாளர்களை, கணினி குலுக்கல் முறையில், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, தலைமை செயலகத்தில் நேற்று தேர்வு செய்தார். அப்போது, மாநகர் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் உடனிருந்தனர். குலுக்கலில் தேர்வானோருக்கு, விரைவில் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
31-Oct-2024