உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள்: அறிவித்தது தமிழக அரசு

தீபாவளிக்கு 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள்: அறிவித்தது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.தீபாவளி பண்டிகை நாடு முழுதும் அக்.,31 அன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக புதிய ஆடைகள், அலங்கார பொருட்கள், பட்டாசுகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், வெளியூர்களில் வசிக்கும் மக்கள், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்களை இயக்கும் தமிழக அரசு, இந்த ஆண்டும் அதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தாண்டு 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.அக்.,28,29 30 ஆகிய தேதிகளில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
அக் 26, 2024 22:17

அதிக பேருந்துகள் விட்டால் மட்டும் போதாது. தரமான, மழை பெய்தால் தண்ணீர் ஒழுகாத, படிக்கட்டுகள், மேற்கூரைகள் கிழண்டு விழாத பேருந்துகளை விடவேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
அக் 26, 2024 21:38

தமிழ்நாடு அரசாங்கத்துக்குப் பாராட்டுக்கள். சிறப்பான நடவடிக்கை. வேறு எந்த மாநிலமும் மக்கள் மேல் இவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. ஆனா பாருங்க, உங்களை, "ஆ வாழ்த்துக்கள் சொல்லல, இந்துவிரோதி " ன்னு கூவுவார்கள். அவர்களை உதாசீனப்படுத்தி விடுங்கள். உ பி, குஜராத் தில் கூட அதிக சிறப்பு பேருந்துகள் என்று எந்த சிறப்பு வசதியும் அரசுகள் செய்யவில்லை.


raja
அக் 26, 2024 18:53

மறக்காம எல்லோரும் குடை எடுத்துக்கொள்ளுங்கள் மக்கா... பேருந்துக்குள் மழை பெய்ய வாய்ப்புன்னு வானிலை அறிக்கை சொல்லுது...பழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என்று ஒரு குரல் கேட்குது...


sundarsvpr
அக் 26, 2024 18:21

மழை பருவ காலம். பெருந்துகள் இயக்குவது நல்ல நடவடிக்கை. நல்ல ஒழுகாத பேருந்துகள் தேவை


Sudarsan S
அக் 26, 2024 18:18

எஸ், கரெக்ட்


Lion Drsekar
அக் 26, 2024 18:03

விவசாயிகள் தங்களது நிலங்களை விற்று பிள்ளைகளை படிக்க வைத்து வீண்போகவில்லை, பட்டினத்தில் வேலைபார்த்தாலும் மறவாமல் ஒவ்வொரு பண்டிகைக்கும் தனது சொந்த மண்ணில் கால் பதித்து குடும்பத்தோடு விழாக்களை கொண்டாதவதைப்பருக்கும்போது அவர்களது பெற்றோர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது, அதே போன்று ஒவ்வொரு விவசாய குடும்பமும் தங்களது குலத்தொழிலாக விளங்கும் விவசாயத்தை நவீன விஞ்ஞான முறையில் மீண்டும் தொடர்ந்தால் பெற்றோர்களுக்கும் , அவர்கள் உணவளித்து இவ்வுலகை காப்பற்றிவரும் இவ்வுலகுக்கும் பெருமை, வந்தே மாதரம்


சமீபத்திய செய்தி