1,475 புதிய பஸ்கள் ஜனவரியில் ஓடும்
சென்னை:புதிதாக வாங்கப்படும் 1,475 பஸ்கள், வரும் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என, அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, இந்த நிதியாண்டில் 3,000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், முதற்கட்டமாக, 453 பஸ்களுக்கு, கடந்த ஜூலை 18ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டு, 371 பஸ்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள, 82 பஸ்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். இதற்கிடையே, 341 கோடி ரூபாயில் 1,475 புதிய பஸ்கள் வாங்குவதற்கான பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது. இந்த புதிய பஸ்கள், அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.