உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்தனூர் அணை வெள்ளத்தில் 150 முதலைகள் எஸ்கேப்; ரகசியம் காத்த வனத்துறை!

சாத்தனூர் அணை வெள்ளத்தில் 150 முதலைகள் எஸ்கேப்; ரகசியம் காத்த வனத்துறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சாத்தனுார் அணை மற்றும் முதலை பண்ணையில் இருந்து பெண்ணையாற்றில், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணை அருகே, ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய முதலை பண்ணை உள்ளது. அணையிலும் ஏராளமான முதலைகள் வசிக்கின்றன. கோடைக் காலங்களில் அணையில் இருந்து வெளியே வந்து, கரைகளில் முதலைகள் இரை தேடுவது வழக்கம். அத்தகைய நேரங்களில் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவர். கடந்த 2ம் தேதி கனமழையால், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 54,000 கன அடிக்கு மேல் வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட்டது.இதனால், தென்பெண்ணை ஆற்றில், 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேறி கடலுக்கு சென்றது.அப்போது, சாத்தனுார் அணையில் இருந்தும், அதனருகே உள்ள பண்ணையில் இருந்தும், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெள்ளத்தில் வெளியேறி உள்ளன.இவை, ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளன. பல முதலைகள், முகத்துவாரம் வழியாக கடலுக்கும் சென்று உள்ளன.வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்த முதலைகள், வெளியே தலைகாட்ட துவங்கியுள்ளன. கடலுாரில் மட்டும் இரண்டு முதலைகள் பிடிபட்டு உள்ளன. முதலைகள் வெளியேறியதால், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், குழந்தை கள், நீர்நிலைகளை பயன்படுத்துவோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மூடி மறைத்தனர்

சாத்தனுாரில் இருந்து முதலைகள் அதிக அளவில் வெளியேறிய நிலையில், அந்த தகவலை நீர்வளத்துறை மற்றும் வனத்துறையினர் மூடி மறைத்ததாக புகார் எழுந்து உள்ளது. இது குறித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், பெண்ணையாற்றை ஒட்டிய நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு, நீர் வளத்துறை மற்றும் வனத்துறை, உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 23, 2024 15:03

ஏம்பா டீம்கா ஜடிடீம் ... - - சொந்த கருத்தையும் மொக்கையா போடுறது .... மத்தவங்களை மடக்கிட்டதா நினைச்சு கருத்து போட்டு பல்பு வாங்குறது .... இந்தமேறி சொத்தையெல்லாம் ஏம்பா அனுப்புறீங்க இங்க ????


சுந்தர்ராஜன்,கள்ளந்திரி
டிச 23, 2024 17:01

அணையிலிருந்து தப்பிய முதலைகளில் ஒரே ஒரு முதலை மட்டும் கடல் வழியாக நீந்தி வந்து கட்டுமர சமாதியில் தினமும் வைக்கும் தயிர்வடையை தின்று விட்டு ஓடி விடுகிறதாம் அந்த முதலையை முதலில் பிடிக்க வேண்டும் என வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.


ghee
டிச 23, 2024 17:08

என்ன சார் பண்றது...பிளாஸ்டிக் சேர், தத்தி, 200 ரூபாய்.....எதுவுமே தெரியாதுன்னு சொல்றாரு....முட்டு குடுக்க மட்டும் முதல் ஆள வந்திடுரரு


BALAJI
டிச 23, 2024 13:23

கரி ரெடி


Rajah
டிச 23, 2024 13:11

தப்பித்த முதலைகளை விட புள்ளிக்கூட்டணியில் உங்களை விழுங்குவதற்கு பல பயங்கர முதலைகள் இருக்கின்றன. அவதானமாக இருங்கள்.


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 12:15

கெடு கெட்ட தீமூக ஆட்சி என்றால் என்ன? இது தி மு க ஆட்சி. எனக்கு மனசாட்சியுடன் மூளையும் இருப்பதால் தான் யோசிக்கிறேன். Anonymous என்று பொய்யான பேரில் வரும் காரணம் என்ன? சொந்த பேர் போட பயமா? 1. யார் எப்படி 150 முதலைகள் என்று எண்ணினார்கள் 2. எந்த ஆதாரத்தில், கால்நடைகளுக்கு ஆபத்து என்கிறீர்கள்? 3. வனத்துறை மறைப்பதாக எழுதுவது எதன் அடிப்படையில்? Anonymous too can think.


Anonymous
டிச 23, 2024 14:12

வெளியேறிய முதலைகள் தஞ்சம் புகுந்த நீர் நிலைகளில் தண்ணீர் குடிக்க செல்லும் கால்நடைகளின் நிலமை, நீர் எடுக்க செல்லும் மக்கள் நிலையை யோசியுங்கள், 150 முதலைகள் என்று நான் கணக்கை வழி மொழியவில்லை, ஆனால் முதலைகள் வெளியேறி உள்ளன என்பது உண்மை, என் பெயர் தெரிந்து உங்களுக்கு ஆக வேண்டியது எதும் இல்லை, உங்கள் பெயர் உண்மையா என்றும் நான் ஆராயவில்லை, இங்கு அது தேவை இல்லாத விஷயம்.


vinu
டிச 23, 2024 15:39

இவரும் தான் தனக்கு secretary இருப்பதாகவும், ஜிஎஸ்டி ஆபீஸர் எனவும், gazetted ஆபீஸர் எனவும் பல புருடகளை சொன்னவர்....


veera
டிச 23, 2024 15:42

இதோ ஒரு தப்பி வந்த முதலையே கருத்து போடுது....அப்போ கரீட்ட தான் இருக்கும்


தமிழ்வேள்
டிச 23, 2024 11:42

திமுக வை விட அபாயமான ஆட்கொல்லி முதலை இனி பிறந்தது தான் வரவேண்டும் ..ஆனால், தனது கூவத்து முதலை கதைக்காக, கட்டுமரம் ஒரு அப்பாவி முதலை குட்டியை கொன்று, அது ரயில் ஏறி செத்ததாக கதை எழுதி, அதையும் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த்தியதுதான் மிக கொடுமை ....


Karuthu kirukkan
டிச 23, 2024 10:53

1990s சென்னை கூவம் ஆற்றில் முதலை இருந்ததால், அதை சுத்தம் செய்ய இயலவில்லை, அந்த உலகவங்கி பணம் சுவாகா - கட்டுமரம். தற்போது முதலை வெளியேறியதால் மக்கள் பாதுகாப்பது நலன் கருதி ஏரி, குளங்களை தூர்வார இயலாது - மங்குனி கட்டுத்துறை . நீர்வளம்


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 10:27

ஏன் 150, ஒரு 400, 500 முதலைகள் போடலாமில்ல. ஜாலியா டைம் பாஸ் ஆகும்.


ghee
டிச 23, 2024 15:44

பாஸ் நீங்க சிபிஐ ஆபிசருனு சொல்லுங்க பாஸ்...நாங்க நம்பிடுவோம்


TCT
டிச 23, 2024 10:24

Please do not make Politics with Crocodiles. Dravida Model if in opposition have full rights to do Politics. If Crocodile hurt and kill any Tamilian then we have to blame Modi and Union Government. If required Thirumvalvan will tell Union Government is responsible to make crocodile catching only from the Ponds and not from the Tamil Dravida Model Politics


V வைகுண்டேஸ்வரன்
டிச 23, 2024 10:21

சற்றும் ஆதாரமோ அதிகார பூர்வ தகவலோ இல்லை. சும்மா அடிச்சு வுடறாங்க. தமிழ் நாட்டில் மக்களை பரபரப்பாவே வெச்சிருக்காங்க.. பாவம் மக்கள் .


Anonymous
டிச 23, 2024 11:19

ஆமாமா, உங்க கெடு கெட்ட தீமூகா அரசு சம்பந்தபட்டதுன்னா, உடனே சும்மா அடிச்சு வுடராங்கன்னு சொல்ல வந்துருவீங்களே, முதலைகள் தப்பியது உண்மை செய்தி, இதனால் மக்கள், கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்க பழகுங்கள், கண்மூடித்தனமாக ஜால்ரா அடிக்க வேண்டாம், மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா உங்களுக்கு?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 23, 2024 15:00

மூளையை பயன்படுத்தி சிந்திப்பதாகக் கூறுபவர் சரியாக செய்தியைப் படிக்க வேண்டாமோ ???? இதோ .... வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்த முதலைகள், வெளியே தலைகாட்ட துவங்கியுள்ளன. கடலுாரில் மட்டும் இரண்டு முதலைகள் பிடிபட்டு உள்ளன ....


sridhar
டிச 23, 2024 09:48

வெள்ளத்தின்போது முதலைகள் வெளியேறக்கூடாது என்று அவசர சட்டம் இயற்றுவோம். திராவிட மாடல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை