உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் விற்பனையாளர்கள் மூலம் கடத்தப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஓ., காலனியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவில் சப்ளை அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர்கள் ஜெகநாதன், சுப்ரமணியன், தாஸ் நேற்று இரவு 7.30 மணிக்கு என்.ஜி.ஓ., காலனிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அதேப் பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் நடத்தும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் லட்சுமி, சித்ரா, வழுதரெட்டியைச் சேர்ந்த ஆனந்தன், மங்கை சேர்ந்து 1,500 கிலோ ரேஷன் அரிசியை, மாரிமுத்து என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனை பறிமுதல் செய்து சிவில் சப்ளை அலுவலர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ