உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்தனூர் அணையில் 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு!

சாத்தனூர் அணையில் 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ivyxf8pm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'பெஞ்சல்' புயல் காரணமாக கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு, வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 119 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில், 118.95 அடி, 7,309 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Indian
டிச 02, 2024 12:57

எல்லா தண்ணீரும் கடலில் விட்டு விட்டு , தண்ணீர் இல்லை என கதற போறாங்க ..


Shiva Krishna
டிச 02, 2024 11:22

தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் போன்ற பெரும்பாலான தென் மாவட்டங்களில் உள்ள குளங்களில் ஒரு ஒட்டு நீர் கிடையாது ஆனால் திராவிட திருடன் நீரை கடலில் விடுகிறான் - பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்கு பின்பு திராவிடன் தமிழகத்தை குடிக்க வைத்து கொள்ளை அடித்ததை தவிர வேறு செயல் செய்யவில்லை...


sundarsvpr
டிச 02, 2024 09:51

எவ்வளோ தொழிநுட்பங்கள் காணுகிறோம். ஆண்டவனைவிட ஜீவன் சக்தியுள்ளவனா என்ற அளவிற்கு பெருமைப்படுகிறோம். மழை நீர் கடலில் கலப்பதால் நிலப்பகுதி கடல் நீரால் சூலப்படுகிறது. . இதனை தவிர்த்திட ஏன் ஆற்று பாதையில் அணைகள் கட்டக்கூடாது? நிதி வசதி இல்லை என்று கூடாது. சாராய விலையை சிறுது ஏற்றி அந்த ஊடுதல் தொகையை உபயோகப்படுத்தலாம். சாராயம் சாப்பிடுவார்கள் பாவம் சிறுது குறையும்.


chennai sivakumar
டிச 02, 2024 10:22

சாராயம் சாப்பிடுபவர்கள் தனவான்களாக கருதப்படுவர்