உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகன தொடர்பில்லா விபத்துகளில் 1,800 பேர் மரணம்

வாகன தொடர்பில்லா விபத்துகளில் 1,800 பேர் மரணம்

சென்னை: மாநிலம் முழுதும் கடந்த ஒன்பது மாதங்களில், வாகனம் அல்லாத இதர விபத்துகளில், 1,800 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் தீ விபத்து மற்றும் ஆபத்துகளில் சிக்கி இருப்போரை காப்பாற்ற, அவசர உதவி எண்களான 100; 101; 112ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்கின்றனர். இந்த அழைப்புகள், சென்னை எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏற்கப்படுகின்றன. அங்கிருந்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அருகே உள்ள போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப்பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுதும் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை, தீ விபத்துகள் தொடர்பாக 19,426 அழைப்புகள் வந்துள்ளன. இவ்விபத்துகளில், 56 பேர் இறந்துள்ளனர். அதேபோல, ஆற்றில் இழுத்து செல்லுதல், கட்டடம் கட்டும் போது சாரத்தில் இருந்து கீழே விழுதல் என, வாகனமில்லாத மற்ற விபத்துகள் தொடர்பாக, ஒரு லட்சத்து 7,510 அழைப்புகள் வந்துள்ளன. இந்த விபத்துகளில், 1,744 பேர் இறந்துள்ளனர். இத்தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி