வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டகட்டர் உவநிய பாருங்கே ஒழிச்சுடுவாருங்கோ
சென்னை: பருவநிலை மாற்றத்தால், 'ஏடிஸ் - ஏஜிப்டி' வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு, அதிகரித்து வருகிறது. இதனால், தினமும் 75 முதல் 100 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், டெங்குவுக்கு பிந்தைய சுவாச தொற்று, நிமோனியா உள்ளிட்டவற்றால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பருவநிலை மாற்றத்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக, 10 மாவட்டங்களில் தான் பாதிப்பு அதிகம் உள்ளது. தினமும் 100 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை, 19,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஏழு பேர் வரை உயிரிழந்துள்ளனர். வரும் டிசம்பர் வரை, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும்.டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தேவையான மாத்திரைகள், போதிய அளவு கையிருப்பில் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும், தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதுவரை மருந்து தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி, கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
டகட்டர் உவநிய பாருங்கே ஒழிச்சுடுவாருங்கோ