உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தட்டச்சு தேர்வு 1.98 லட்சம் பேர் பங்கேற்பு

தட்டச்சு தேர்வு 1.98 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை:தமிழகத்தில், 208 மையங்களில் நடந்த தட்டச்சு தேர்வில், 1.98 லட்சம் பேர் பங்கேற்றனர்.தமிழக அரசு அனுமதி பெற்று, 3,500 தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மையங்களில், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என, இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது.இந்தாண்டுக்கான இளநிலை தட்டச்சு தேர்வு நேற்று நடந்தது. தொடர்ந்து முதுநிலை தட்டச்சு தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதில், 1.98 லட்சம் மாணவர்கள், 208 தேர்வு மையங்களில் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள் ஏப்., 23ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ