உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 திருக்குறள்களை டைப் அடித்து ஒன்றாம் வகுப்பு மாணவி சாதனை

40 திருக்குறள்களை டைப் அடித்து ஒன்றாம் வகுப்பு மாணவி சாதனை

புதுச்சேரி: ஒன்றாம் வகுப்பு மாணவி மூன்றரை மணி நேரத்தில் 40 திருக்குறள்களை டைப் அடித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார். புதுச்@சரி, முத்தியால்பேட்டையில் வசிப்பவர் அலைச்சந்திரன். பெயிண்டர். இவரது மகள் தனலட்சுமி(6). நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனலட்சுமி டைப்பிங்கில் படுசுட்டி. கம்ப்யூட்டரில் திருக்குறள்களை டைப் அடிக்கும் தனலட்சுமியின் சாதனை நிகழ்ச்சி சுசீலா பாய் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. சாதனை நிகழ்ச்சியை லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., காலை 11.10 மணிக்கு துவக்கி வைத்தார். கடவுள் வாழ்த்து அதிகாரத்தை முதலில் தொட்ட சிறுமி அசத்தலாக அடுத்தடுத்த அதிகாரத்தின் குறள்களையும் தொடர்ச்சியாக டைப்பிங் செய்தார். சிறுமி மதியம் 2.40 மணிக்கு சாதனை நிகழ்ச்சியை முடித்து கொண்டார். மூன்றரை மணி நேரத்தில் சிறுமி தனலட்சுமி மொத்தம் 40 திருக்குறள்களை தமிழில் டைப் செய்திருந்தார். மாணவியின் சாதனை நிகழ்ச்சி சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் ஹரியானா மாநிலத்தில் உள்ள இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை