உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை 

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை 

சென்னை:தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 4,829 சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. இந்த கடைகளுக்கு, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை. அதன்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வரும், 15ம் தேதியும், குடியரசு தினத்தை முன்னிட்டு, 26ம் தேதியும், மதுக்கடைகள் மற்றும் அதை ஒட்டிய மதுக்கூடங்களை மூடுவதற்கு, டாஸ்மாக் உத்தரவிட்டு உள்ளது. இரு தினங்களிலும் ஆய்வு நடத்தி, மதுக்கடை மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்யுமாறு, மாவட்ட மேலாளர்களை அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை