உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுவன் கடத்தல் வழக்கு மேலும் 2 பேருக்கு வலை

சிறுவன் கடத்தல் வழக்கு மேலும் 2 பேருக்கு வலை

சென்னை:சிறுவனை கடத்த கேரள பதிவு எண் காரை வரவழைத்த, புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த இருவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு அருகே களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ், 23; தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ, 21, ஆகியோர் காதல் திருமணம் செய்தனர். அவர்களை பிரிக்க முயன்ற பெண்ணின் தந்தை வனராஜ், 55, காவல் துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட, முன்னாள் காவலர் மகேஸ்வரியுடன் சேர்ந்து, 17 வயதான தனுசின் சகோதரரை கடத்தினார். இது தொடர்பாக, வனராஜ், மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை, திருவாலாங்காடு போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள், வனராஜ், மகேஸ்வரி உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, 'சிறுவனை கடத்த புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த, இரண்டு பேர் கார்களை ஏற்பாடு செய்தவர். கேரள பதிவு எண் உடைய காரில், சிறுவனை கடத்தினோம்' என, வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் இரண்டு பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை