உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்; அறிவித்தது தமிழக அரசு

பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்; அறிவித்தது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ், கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gbrfbh64&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். * தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.* ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.* தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.* தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.* இது தவிர தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கருணைத் தொகையாக வழங்கப்படும். தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் 2.75 லட்சம் பேருக்கு, 369 கோடி ரூபாய் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800-ஐ போனஸ் ஆக பெறுவர். 2,075 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.369.65 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக தரப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுவதுடன், எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V RAMASWAMY
அக் 10, 2024 13:25

வேலை செய்யாமலேயே சம்பளம், வேலை செய்வதற்கு கிம்பளம் அதற்கு மேல் போனஸ், அட்ரா சக்கை, அட்ரா சக்கை. கிடைத்தால் தமிழக அரசில் வேலை கிடைக்கவேண்டும். அதிர்ஷ்டம் இவ்வுலகத்தில், ஆனால் மேலே போன பிறகு கேட்கும் கேள்விக்கு என்ன பதில்?


ஆரூர் ரங்
அக் 10, 2024 11:38

பெரும் நஷ்டமடையும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஏழைகளின் வரிப்பணத்தில் லட்சக்கணக்கில் போனஸ்?. இழுத்து மூடினால் நல்லது. வணிகம் செய்வது அரசின் வேலையல்ல.


Svs Yaadum oore
அக் 10, 2024 10:28

போராடும் சாம்சங் ஊழியர்களுக்கு சிறைச்சாலை ....அதற்கும் மேல் சாலை விபத்து ஊழியர் படுகாயம் என்று கொடுஞ்செயல் ......ஆனால் அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு ..... ஒரு கண்ணில் வெண்ணெய் ஆனால் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு....எவன் அப்பன் வீட்டு பணம்?? ....


raja
அக் 10, 2024 09:55

திருட்டு திராவிட மாடல் அரசா தீபாவளி என்கிறது.... விடுமுறை தினம் என்று தானே கூற வேண்டும் இல்லை என்றால் ஈரோட்டு ....கோவித்து கொள்வார்கலே.... முக்கியமா கிரிப்டோ சின்ன கோமாளிக்கு கோவம் வறுமே ...


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2024 09:37

பணம் எங்கிருந்து வந்தது ???? ஜீபூம்பா போட்டு வந்துச்சா ????


Rajarajan
அக் 10, 2024 09:24

தமிழக அரசில் மொத்தம் எத்தனை பொதுத்துறை / அரசுத்துறை நிறுவனங்கள், இவற்றின் லாப நஷ்ட கணக்கை, வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு உடனே வெளியிடவேண்டும். மத்திய அரசும் அப்படியே. இருவரும் எப்படி போட்டு நஷ்டத்தை / விழலுக்கு நீர் இறைப்பதை ஊக்குவிக்கின்றனர் என்று பொதுமக்கள் பார்க்கவேண்டும். பின்னர், பா. ஜ.க. வின் திரு. ராஜா அவர்கள் ஒப்பீடு செய்து, பேட்டி அளிக்கவேண்டும். அப்போது, இரு அரசுகளின் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறும். போட்டிக்கு தயாரா ?


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 10, 2024 08:32

முதலில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று புலம்பினார்கள். இப்போது 20% போனஸ் கொடுக்க எங்கிருந்து பணம் வருகிறது?


raja
அக் 10, 2024 10:00

இப்போ தான் மத்திய இல்லை ஒன்றிய அரசு மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கி உள்ளதே... மடை மாற்றி விட வேண்டியது தான்.... கேள்வி கேட்டால் உங்க அப்பன் வீடு காசையா கொடுத்தோமுண்ணு உதார் விட்டுட்டு டில்லி சென்று கதவை மூடி காலில் விழுந்தால் போயிற்று ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை