உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  8 மாவட்டங்களில் 20 ஊராட்சிகள் புதிதாக உருவாக்கம்

 8 மாவட்டங்களில் 20 ஊராட்சிகள் புதிதாக உருவாக்கம்

சென்னை: தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், 17 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, 20 கிராம ஊராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ள அரசாணை:

தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளின் எல்லைகள், மறு வரையறை பணிகள் நடந்து வருகின்றன. இதன் அடிப்படையில், புதிய கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்படுகின்றன. செ ங்கல்பட்டு, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், சிவகங்கை, திருச்சி ஆகிய எட்டு மாவட்டங்களில், 17 கிராம ஊராட்சிகளின் எல்லைகள், மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. அவை, 37 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக, கோவையில் 6; கள்ளக்குறிச்சி 4; திருச்சி 4; திண்டுக்கல் 2; செங்கல்பட்டு, தர்மபுரி, கரூர், சிவகங்கை மாவட்டங் களில் தலா ஒன்று என, மொத்தம் 20 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய கிராம ஊராட்சிகள் குறித்த அறிவிப்பை, மாவட்ட அரசிதழில் வெளியிட, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளுக்கான பதவிகாலம் முடிந்த பின், அரசாணை அமல்படுத்தப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

T.subramanian
டிச 13, 2025 23:30

ஒரு முறை தாராபுரம் பஞ்சாயத் யோகிதை முதலமைச்சர் அவர்கள் வாங்கல் வந்து பாருங்கள் அப்பொலுது தெரியும் ஏன் ஆர் எஸ் நகர் யோகிதை எப்படி இருக்கிறது என்று தாராபுரம் அலங்கியம் பழனி ரோடு பாத்து கிலோமீட்டர் ஒரு பயணிகள் நிழற்குடைகூட கிடையாது எல்ல மினிஸ்டர்களும் அய்யா சக்கரபாணி யாய் பார்த்து நடந்து kollungal


T.subramanian
டிச 13, 2025 23:15

தாராபுரம் க்கவேண்டாச்சிபுதூர் ஏன் இன்னும் தாராபுரம் நகராட்சியுடன் இணைக்கவில்லை இதனால் வீட்டுக்கு ஒரு பைப்பை காங்நேச்டின் இல்லை ரோடு டிட்ச் வசதி இல்லை தாராபுரம் அலங்கியம் பழனி ரோடு கிம் முதல் அணைத்து அரசு அதிகாரி அண்ட் தாராபுரம் கான்ஸ்டிடூஷன் மினிஸ்டர் அனைவரும் ஒரு முறை விசிட் பண்ணிப்பாருங்கள் உங்கள் கட்சி யோகிதை தெரிந்துவிடும் இது சம்பந்தமாக 3 வருடமாக பல பெட்டிஷன் முதர்வர் க்கு ம் அணைத்து துறைகளுக்கும் போட்டும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜமான் இல்லை 2026 நங்கள் இவர்களுக்கு சங்கூத முழு முயற்சில் பாடுபடுவோம் ஜெய் அட்மட் அண்ட் பிஜேபி


Gajageswari
டிச 13, 2025 17:14

திருப்பூர் மாவட்டத்தில் ஏன் பிரிக்கவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை