உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 18 நாட்களில் மழைக்கு 20 பேர் பலி

தமிழகத்தில் 18 நாட்களில் மழைக்கு 20 பேர் பலி

சென்னை: தமிழகத்தில், இம்மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, மழைக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. மாநிலம் முழுதும் சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது. இம்மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, மழைக்கு, 10 பெண்கள், எட்டு ஆண்கள், இரண்டு குழந்தைகள் என, மொத்தம் 20 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக கடலுார் மாவட்டத்தில் ஐந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுதும் மழையில், 435 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன; 267 கால்நடைகள் இறந்துள்ளன. தேனி மாவட்டத்தில் 7,500, ராணிப்பேட்டை மாவட்டத்தில், 3,800 என, 11,300 கோழிகள் இறந்துள்ளன. 45 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 20, 2025 08:59

மழைக்கால பிரச்சினைகளை எதிர்கொள்ள திமுக அரசு முழு அளவில் தயார் என்று முதல்வர் கூறி இருந்தாரே. அப்படி இருந்தும் அதற்குள் 20 பேர் பலியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை