மேலும் செய்திகள்
'பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்'
16-Apr-2025
சி.பி.எஸ்., எனப்படும், பங்களிப்பு ஓய்வு திட்டத்தில், கல்லுாரி ஆசிரியர்களுக்கு மறு நியமன காலத்தில், 20 சதவீத அளவுக்கு ஊதியம் குறைத்து வழங்கப்படுவதால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.கல்வி ஆண்டுக்கு இடையே, பணி ஓய்வு பெறும் கல்லுாரி, பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டு நிறைவு நாளான, மே 31ம் தேதி வரை, மறு நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, மறு நியமனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், சி.பி.எஸ்., எனப்படும், பங்களிப்பு ஓய்வு திட்டத்தில் இருந்தால், ஓய்வு பெறுவதற்கு முன் கடைசியாக பெற்ற ஊதியமே, மறுநியமன காலத்திற்கும் ஊதியமாக வழங்க வேண்டும் என, உயர்கல்வித் துறை, 2017 ஆக., 23ல் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2014 அக்., 23ல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 170லும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், 2020ல் நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண், 16ஐ பின்பற்றி, திருப்பூர், கோவை, ஈரோடு, வேலுார், திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட கருவூலங்கள் மட்டும், கடந்த எட்டு மாதங்களாக மறு நியமனத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் சம்பளம் குறைத்து வழங்குவதாக, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, உயர்கல்வி துறை, கருவூல கணக்கு துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. எட்டு மாதங்கள் கடந்தும், உரிய தீர்வு வழங்கப்படாததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக, மாநில பொதுச்செயலர் சுரேஷ் கூறுகையில், “சி.பி.எஸ்., திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியமே இல்லை என்ற நிலையில், அவர்கள் மறு நியமன கால ஊதியத்திலும், 20 சதவீதம் குறைவாக வழங்குவது கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, மறு நியமன கால ஊதியம் முழுதும் கிடைப்பதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.- நமது நிருபர் -
16-Apr-2025