உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூகுள் மேப் உதவியுடன் சென்ற வேன் கவிழ்ந்து 20 போலீசார் காயம்

கூகுள் மேப் உதவியுடன் சென்ற வேன் கவிழ்ந்து 20 போலீசார் காயம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜை பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் 'கூகுள் மேப்' உதவியுடன் சென்ற போது பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் 20 பேர் காயமடைந்தனர்.கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை, ஜெயந்தி விழா 3 நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக மாநிலம் முழுவதும் இருந்து போலீசார் வந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த 30 போலீசார் ஒரு வேனில் ராமநாதபுரம் வந்தனர். அங்கிருந்து அவர்கள் கமுதிக்கு புறப்பட்டனர். நேற்றுமுன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு சத்திரக்குடி அருகே கீழகோட்டை வழியாக கீழம்பல் நோக்கி சென்றனர். டிரைவர் 'கூகுள் மேப்' உதவியுடன் வேனை ஓட்டிச்சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த கண்மாயில் நிலை தடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த 20 போலீசாருக்கும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் காயமடைந்தவர்கள் பரமக்குடி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

visu
அக் 28, 2024 16:26

கூகுள மேப் சரியாகத்தான் வழிகாட்டும் இணைய இணைப்பு மெதுவாக இருக்கும் இடங்களில் தாமதமாக வழிகாட்டும் இரெண்டாவது சாலையில் உள்ள பள்ளங்களையெல்லாம் காட்டாது சற்று மூளையையும் பயன்படுத்தி வாகனத்தை ஓட்ட வேண்டும்


Raa
அக் 28, 2024 16:19

என்ன சொல்ல வரீங்க? கூகிள் மேப் பார்த்து பள்ளத்தை பார்க்கவில்லையா இல்லை, கூகுளை மேப்பே குழிக்குத்தான் வழி சொல்லியதா? செய்தியில் ஒரு தெளிவு வேண்டுமல்லவா? சும்மா போதம் பொதுவா போட்டுவிடுவது...


krishnamurthy
அக் 28, 2024 09:15

வழி தெரிந்த போலீஸ் ஒருவர் கூட இல்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை