உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால் 208 அரசு பள்ளிகள் மூடல்: பள்ளிக்கல்வி துறை விளக்கம்

தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால் 208 அரசு பள்ளிகள் மூடல்: பள்ளிக்கல்வி துறை விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால், 208 அரசு பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன' என, பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது. நம் நாளிதழில், '207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்யம்' என்ற தலைப்பில், மாணவர்கள் சேராத பள்ளிகள் மூடப்படுவது குறித்த செய்தி, நேற்று வெளியானது. இது தொடர்பாக, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் அளித்துள்ள விளக்கம்: தமிழகத்தில், 58,924 பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.21 கோடி மா ணவர்கள், 5 லட்சத்து, 34,799 ஆசிரியர்கள் உள்ளனர். இவற்றில், 208 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், 114 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 சுயநிதி பள்ளிகள், இரு மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என, மொத்தம், 1,204 பள்ளிகளில், சேர்க்கை நடக்கவில்லை . சுயநிதி பள்ளிகளில், 72 சதவீதம், மற்ற பள்ளிகளில், 28 சதவீதம் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இதற்கு, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதே முக்கிய காரணம். அரசு, தனியார் பள்ளி என்ற பாகுபாடு காரணமல்ல. அதாவது, 2011ல், 1 வயதுக்கு ள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை, 10.74 லட்சமாக இருந்த நிலையில், 2016ல், 10.45 லட்சமாகவும், 2021ல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது. அடுத்த ஆண் டில், 8.78 லட்சமாக குறையும் என, 2020ல் வெளியிடப் பட்ட மத்திய மக்கள் தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்கள், தொலைதுார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், பள்ளிகளில் சேரும் வயதில் குழந்தைகள் இல்லை. கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், ஊத்துப்பட்டி பள்ளியில் படித்த நான்கு மாணவ, மாணவியரின் பெற்றோர் இடம் பெயர்ந்தனர். அவர்களில் மூன்று மாணவர்கள், எல்லை மேட்டுப்பட்டி புதார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும், மற்றொரு மாணவி சின்னதாராபுரம் ஆர்.சி உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் படிக்கின்றனர். அதனால், யாரும் இடைநிற்றலில் இல்லை. பெற்றோர் தங்களின் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி சேர்த்து, ஆங்கில வழிக்கல்வி பெறுவதை பெருமையாக கருதுவதாலும், பெற்றோர் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வதாலும், கிராமப்புற பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்டமைப்புகளை மேம்படுத்தியும், மாணவர் சேர்க்கையை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

என்றும் இந்தியன்
ஆக 13, 2025 16:50

சில்லறைத்தனமான விளக்கம் திருட்டு திராவிட மடியில் அறிவிலி அரசின் பள்ளி கல்வித்துறையிடமிருந்து . குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு அனால் சனத்தொகை In 2014, the population of Tamil Nadu was estimated to be around 7.547. In 2024, the population of Tamil Nadu was estimated to be around 8.221 crores. குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததால் 7.547 கோடி மிக மிக குறைந்து 8.221 கோடி ஆச்சி அப்படித்தானே ???


venugopal s
ஆக 13, 2025 11:45

இது எல்லா மாநிலங்களிலும், பாஜக ஆளும் குஜராத் மஹாராஷ்டிரா உத்தரப் பிரதேசம் உள்பட, நடந்து கொண்டிருக்கும் சாதாரண விஷயம் தான். மக்கள் அரசுப் பள்ளிகள் விட தனியார் பள்ளிகளில் கல்வித்தரம் சிறப்பாக இருப்பதாக நினைக்கின்றனர்.


karruppiah sivakumar, Singapore
ஆக 13, 2025 11:26

இப்படியே போனால் டாஸ்மாக் கடை வியாபாரம் என்னத்துக்கு ஆகுறது..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 13, 2025 10:53

வேடிக்கையான விளக்கம்.. மூர்க்க காட்டேரிகளுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி .....


Natarajan Ramanathan
ஆக 13, 2025 10:51

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தலைமை ஆசிரியர், மேலும் ஒரு பெண் ஆசிரியர் மற்றும் ஒரு சமையல் பெண் இருக்கும் பள்ளியில் ஒரே ஒரு மாணவன் இருக்கும் செய்தி வருகிறது. அந்த மாணவனை வேறு பள்ளியில் சேர்த்து ஊழியர்கள் மூவரையும் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யலாமே.


Apposthalan samlin
ஆக 13, 2025 10:33

என் தாத்தாவுக்கு 12 பிள்ளைகள் 12 பேருக்கும் மகள் மகன் 16 பேர் இறந்தது போக 13 பேர் தான் இப்படித்தான் தமிழகத்தில் மக்கள் தொகை இருக்கிறது ஏன் என்றால் படித்தவர்கள் ஒன்னு இல்லை என்றால் ரெண்டு பிள்ளைகள் தான் பெற்று கொள்கிறார்கள் .வடக்க பார்த்தால் 7 8 பெற்று கொள்கிறார்கள் ஏன் என்றால் படிப்பு அறிவு கிடையாது எப்படி கல்வி சுகாதாரம் கொடுக்க உடையும் .


கூத்தாடி வாக்கியம்
ஆக 13, 2025 10:19

குழந்தை பிறப்பை டாஸ்மாக் மூலம் தடுத்து இப்போது பள்ளிகளை குறைத்து பின்னர் கல்லுரியை குறைத்து பின்னர் வேலை வாய்ப்பை தூக்கி வடக்கன் கிட்ட குடுத்து. திராவிட மாடலை ஓய்வு எடுக்க சொல்லுவோம்


G Mahalingam
ஆக 13, 2025 10:19

புது புது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டியது. பிறகு அரசு பள்ளிகளில் எப்படி சேருவார்கள். இப்போது கஷ்டபட்டு தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள்.


Panneerselvam Rathinasabapathy
ஆக 13, 2025 09:52

குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது உண்மைதான், ஆனால் ஆண், பெண் திருமண விகிதமே குறைந்து வருவதை யாரும் உணராமல் இருப்பது வருந்த தக்கது. நம் கலாச்சரத்திற்கு மீறிய சில கோட்பாடால் திருமணம், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


தமிழ்வேள்
ஆக 13, 2025 09:15

திருட்டு திராவிட பாலியல் மற்றும் ஜார்ஜ் பொன்னையா வகை அல்லேலூயா திணிப்பு வாத்திகள் இருக்கும் அரசுப் பள்ளிகளில் வடக்கன்ஸ் கூட தங்கள் பிள்ளைகளை சேர்க்க மாட்டார்களே...


புதிய வீடியோ