உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 21 தடுப்பணை, 9 அணைக்கட்டு ரூ.560 கோடியில் கட்ட திட்டம்

21 தடுப்பணை, 9 அணைக்கட்டு ரூ.560 கோடியில் கட்ட திட்டம்

சென்னை : “தமிழகத்தில், 560 கோடி ரூபாயில் 21 தடுப்பணைகள், ஒன்பது அணைக்கட்டுகள் கட்டப்படும்,” என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

நீர்வளத் துறைக்கு, நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த கூடுதல் அலுவலக கட்டடம் சென்னையில் கட்டப்படும் கோவை, கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், திருச்சி, வேலுார் ஆகிய 15 மாவட்டங்களில் 21 இடங்களில், 374.95 கோடி ரூபாயில் தடுப்பணைகள் அமைக்கப்படும் திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்துார், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய எட்டு மாவட்டங்களில், ஒன்பது இடங்களில், 184.74 கோடி ரூபாயில் அணைக்கட்டுகள் அமைக்கப்படும் சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில், நான்கு இடங்களில், ஆறுகளின் குறுக்கே 6.04 கோடி ரூபாயில், 'ரெகுலேட்டர்' எனப்படும் புதிய நீரொழுங்கிகள் அமைக்கப்படும் கோவை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நெல்லை, திருப்பூர், வேலுார் ஆகிய மாவட்டங்களில், 17 இடங்களில், 130.80 கோடி ரூபாயில் பாலங்கள், தரை பாலங்கள் அமைக்கப்படும் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், 14 முன்னாள் ஜமீன் கால்வாய்கள், 9.34 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும் கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்டங்களில், ஐந்து இடங்களில் 1.34 கோடி ரூபாயில், கடலரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்கவும், 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகள், 722.55 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும் கோவை, தென்காசி, நெல்லை, திருப்பத்துார், திருப்பூர், திருச்சி, வேலுார் ஆகிய மாவட்டங்களில், 13 இடங்களில் உள்ள அணைகள், அணை பகுதிகளில் உள்ள கட்டுமானங்களை பழுது பார்த்தல், பராமரித்தல், புதுப்பித்தல் பணிகள், 19.80 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் ஈரோடு, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்துார், துாத்துக்குடி, திருச்சி, வேலுார் ஆகிய மாவட்டங்களில், 11 இடங்களில், 131.28 கோடி ரூபாயில், வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் தமிழகம் முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், 6.74 கோடி ரூபாயில், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அணைக்கட்டு, 130 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாதுக்களின் தரம், புவியியலை மதிப்பிட

மாநில கனிம ஆய்வு அறக்கட்டளைநீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழக அரசால், 1959ல் ஏற்படுத்தப்பட்ட, தமிழக சிறு கனிம சலுகை விதிகளை மறுஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை பரிந்துரைக்க குழு அமைக்கப்படும் விழுப்புரம் மாவட்டம் வானுார் தாலுகா, பொம்மையார்பாளையம் கிராமத்தில் உருவாகியுள்ள தனித்துவமான புவியியல் அமைப்பான பள்ளத்தாக்கு, 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் சுரங்கங்கள், குவாரிகள் தொடர்பாக, இயற்கை வளங்கள் துறையின் அனைத்து செயல்பாடுகளையும் இணைக்க, திட்ட மேலாண்மை அலகு நிறுவப்படும் தமிழகத்தில் கனிம வளங்கள் இருப்பு, தாதுக்களின் தரம், புவியியல் அமைப்பை மதிப்பிட ஒரு கோடி ரூபாயில், மாநில கனிம ஆய்வு அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் திருவண்ணாமலை, திருநெல்வேலியில் 37.50 லட்சம் ரூபாயில், இரண்டு புவி தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும் தர்மபுரி மாவட்டம், கடத்துார் காப்புக்காட்டில் வனத்துறை வாயிலாக நீர்நிலைகளை உருவாக்கி, பூர்வீக இன தாவரங்கள், 14 லட்சம் ரூபாய் செலவில் நடப்படும் தமிழக மேக்னசைட் நிறுவனத்தில், 75 லட்சம் ரூபாயில், ஒருங்கிணைந்த வணிக மேலாண்மை மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கனிமங்கள் வாயிலாக ரூ.1,414 கோடி வருவாய்

'தமிழகத்தில் சிறு கனிமங்கள், பெருங்கனிமங்கள், கனிம எண்ணெய் விற்பனை வாயிலாக, நடப்பு நிதி ஆண்டில், 1,414 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது' என, இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், சுண்ணாம்புக்கல், நிலக்கரி, மார்ல், கிராபைட், அணுசக்தி கனிமங்கள், மேக்னசைட் ஆகியவை பெருங்கனிமங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளன.நடப்பு நிதி ஆண்டில், பிப்., வரையிலான காலத்தில், 408.62 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டு, 433.87 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.சாதாரண கற்கள், கிராவல், மண், பல வண்ண கிரானைட், கருப்பு கிரானைட், கூழாங்கற்கள், தீக்களிமண், லைன்கன்கர், சிலிக்கா மணல், களிமண், பெல்ஸ்பார், பத்து களிமண், கால்சைட் போன்ற சிறு கனிமங்கள், 637.24 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டன. இதன் வாயிலாக, 601.70 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதுதவிர, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி, விற்பனை வாயிலாக 378.28 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த மூன்று பிரிவுகளிலும் சேர்த்து, 1,413.85 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அத்துடன் சாதாரண கற்களை வெட்டி எடுப்பதற்கான அனுமதி. இணையவழி ஏலம் விடப்பட்டதால், 115.44 கோடி ரூபாய்; பசுமை நிதி வழியில், 80.89 கோடி ரூபாய்; அபராதம் வாயிலாக, 60.74 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தமிழக மேக்னசைட் நிறுவனம் தொடர்ந்து, லாபம் ஈட்டி வருகிறது. வரும் நிதி ஆண்டில், இந்நிறுவனம் வாயிலாக, 40,000 டன் கச்சா மேக்னசைட்; 9,000 டன் முழு எரியூட்டப்பட்ட மேக்னசைட்; 6,000 டன் மித எரியூட்டப்பட்ட மேக்னசைட்; 1.05 லட்சம் டன் டுனைட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 117.77 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். தற்போது, 17 கனிமங்களை குத்தகைதாரர்களின் குவாரிகளில் இருந்து, எடுத்துச் செல்வதற்கான அனுப்புகை சீட்டுகள், 'ஆன்லைன்' முறையில் வழங்கப்படுகின்றன. இது பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Gajageswari
மார் 26, 2025 05:18

தூர் வாரும் ?


Raj
மார் 25, 2025 09:26

இது ஏதோ 2026 தேர்தல் அறிக்கை மாதிரி இருக்கு. ஏன் நாலு வருஷமா &&&& இருந்தீங்களா.இதெல்லாம் நடக்குமா.‌ இல்ல ஒரு வேளை ஆட்சிக்கு வந்தா அடுத்த அஞ்சு வருஷ கடைசில இதையே சொல்வீங்களா.


D.Ambujavalli
மார் 25, 2025 05:49

இந்த நாலு வருஷத்தில் இப்படி நீர் வீணாவது எதுவும் கண்ணில் படவில்லையாம் அவசரக்கோலம் அள்ளித்தெளித்து ‘இதோ, இத்தனை அணைகள், தடுப்பணைகள், நீர் மேலாண்மை நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று தேர்தலில் பீற்றிக்கொள்ளத்தான் இந்த அறிவிப்பு


தமிழன்
மார் 25, 2025 04:58

தேர்தல் வருதுல்ல ஏதாவது இனிப்பாக சொன்னால்தான் ஓட்டு பிச்சை எடுக்க முடியும் லிங்கா படத்தில் ரஜினி செய்யும் காமெடி இது ரஜினியை ஒருத்தன் புகழ்ந்து பாராட்டுவான் பதிலுக்கு ரஜினியும் பரிசை கொடுக்காமல் வாயாலேயே வடை சுடுவார் 45% கமிஷன் சேர்த்து இந்த 560 கோடியா இல்லை சேர்க்காமலா??


Mani . V
மார் 25, 2025 04:31

17 கோடியில் கட்டிய தடுப்பணை ஒரே மாதத்தில் பெய்த முதல் மழையில் தற்கொலை செய்து கொண்டு அந்த தண்ணீரோடு போய் விட்டது. இதெல்லாம் எம்மாத்திரம் ரூ 560 கோடி ஆட்டை.


Kasimani Baskaran
மார் 25, 2025 03:38

தேர்தல் வருகிறது என்றால் டன் கணக்கில் பொய் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை