ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம்; டி.ஜி.பி., உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,153 போலீசார் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியிற்றி வரும் 2,153 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியிட மாறுதல் கேட்ட போலீசாருக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு இடத்தில் 3 ஆணடுகளுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஓராண்டில் ஏதேனும் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்கள், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.