உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 23 செ.மீ., மழை

சென்னையில் 23 செ.மீ., மழை

சென்னை:''வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, புதுச்சேரி, நெல்லுார் இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும்,'' என, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.அவர் அளித்த பேட்டி: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே, 490 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலையில், புதுச்சேரி - நெல்லுார் இடையே, தமிழகத்தின் வட பகுதி, தெற்கு ஆந்திர பகுதியில் கரையை கடக்கும்.நேற்று காலை முதல், தமிழகம் முழுதும் 42 இடங்களில் கன மழை பெய்துள்ளது. சென்னையில், நேற்றிரவு 8:00 மணி நிலவரப்படி, 14 மணி நேரத்தில், அதிகபட்சமாக, மணலி புது நகரில், 23 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் எவ்வளவு மழை?

சென்னையில், நேற்று காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பெய்த மழை விபரத்தை, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மணலி புதுநகர், சோழவரம், செங்குன்றம் - 23 கத்திவாக்கம் - 21.2 பெரம்பூர், கொளத்துார் - 21.1அயப்பாக்கம் - 21அண்ணாநகர் மேற்கு - 19.2வேளச்சேரி - 17.7திருவொற்றியூர் - 17.4மணலி - 17.2அம்பத்துார் - 16.6பேசின்பாலம் - 16.0* சென்னையில் பெரும்பாலான பகுதிகளில், 10 செ.மீ.,ருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. குறைந்த பட்சமாக அடையாறில், 8.5 செ.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை