உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு வங்கியை ஏமாற்றிய வழக்கு:ரூ.235 கோடி சொத்துக்கள் மீட்பு

அரசு வங்கியை ஏமாற்றிய வழக்கு:ரூ.235 கோடி சொத்துக்கள் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பண மோசடி வழக்கில் தொடர்புடைய 235 கோடி ரூபாய் சொத்துக்களை, இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில், இந்தியன் வங்கி தி.நகர் கிளையில் கடன் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.இதற்கென வங்கியை ஏமாற்றும் நோக்கத்துடன், தவறான புள்ளி விவரங்களுடன் கூடிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடன் வழங்கியபிறகே, நிறுவனத்தின் நிதி நிலை, வருவாய் ஆகியவை தொடர்பாக, அவர்கள் கொடுத்த ஆவணங்கள் பொய்யானவை என்று தெரியவந்தது.இதையடுத்து வங்கி அளித்த புகாரில் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. பண மோசடி சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து நிறுவனத்துக்கு சொந்தமான 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை, மோசடியால் பாதிக்கப்பட்ட இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை