உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 24 மனை தெலுங்கு செட்டி சமூகம் முதல்வர் தனிப்பிரிவில் மனு

24 மனை தெலுங்கு செட்டி சமூகம் முதல்வர் தனிப்பிரிவில் மனு

சென்னை : 'தெலுங்கு செட்டி சமூகத்தில் உள்ள மூன்று பிரி வுகளை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 24 மனை தெலுங்கு செட்டி சமூக பாதுகாப்பு சங்க மாநில தலைவர் பால் பாண்டியன், பொதுச்செயலர் மனோகரன் ஆகியோர், முதல்வர் தனிப்பிரிவில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் சமூகம், 24 மனை தெலுங்கு செட்டி, சாது செட்டி, தெலுங்கு செட்டி, தெலுங்கு பட்டி எனும் நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறது. கடந்த 125 ஆண்டுகளாக, சமூகம், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில், பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறோம். எங்கள் சமூகத்தினர் பரம்பரையாக கோணி தைத்தல், கூவி விற்றல், கூலி வேலை ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இடஒதுக்கீட்டில் உரிய இடம் வழங்காததே, இந்த சமூகம் உரிய முன்னேற்றம் அடையாததற்கு காரணமாகும். நான்கு பெயர்களில் அழைக்கப்படும் சமூகத் தை, கல்வி, வேலை வாய்ப்பு பெறும் இடஒதுக்கீடு வாய்ப்புகளில், இரு வேறு பட்டியல்களில் இடம்பெற செய்திருப்பது, எங்கள் சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட பாகுபாடாகும். அது எங்கள் சமூகத்தினருக்கு மிகப்பெரிய மன உளைச்சலையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, தெலுங்கு பட்டி செட்டி இடம்பெற்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், மற்ற மூன்று பிரிவினரையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை