பாதங்கள் சோதனைக்கு ரூ.27 கோடி
சென்னை : நீரிழிவு நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, கால் இழப்பை தடுப்பதற்காக, 'பாதம் காப்போம்' திட்டத்தை செயல்படுத்த, 26.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 36 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் கீழ், 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை களில், பாத பாதிப்பு கண்டறிதல் மையங்கள் நிறுவப்பட உள்ளன. மேலும், 100 அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில், நீரிழிவு பாத அறுவை சிகிச்சை வசதிகளும் செய்யப்பட உள்ளன.