உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 தடங்களில் 271 கி.மீ., கவச் தொழில்நுட்பம்

3 தடங்களில் 271 கி.மீ., கவச் தொழில்நுட்பம்

சென்னை:தெற்கு ரயில்வேயில் முதற்கட்டமாக, மூன்று வழித்தடங்களில், 271 கி.மீ., துாரத்துக்கு ரயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, 'கவச்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ஜோலார்பேட்டை -- சேலம் -- ஈரோடு; விழுப்புரம்- - காட்பாடி; கரூர் -- திண்டுக்கல்; சென்னை கடற்கரை - - தாம்பரம் -- செங்கல்பட்டு; மதுரை -- கன்னியாகுமரி; சோரனுார் -- சேலம்; ஈரோடு -- கரூர் உள்ளிட்ட வழித்தடங்களில், 'கவச்' தொழில்நுட்பம் கொண்டு வரப்பட உள்ளது.இதில், சென்னை - சென்ட்ரல்,- அரக்கோணம்; அரக்கோணம் -- ரேணிகுண்டா; சென்னை சென்ட்ரல் -- கூடூர் ஆகிய மூன்று வழித்தடங்களில், 271 கி.மீ., துாரத்துக்கு, முதலில் கவச் தொழில்நுட்பம் செயல்படுத்த, 'டெண்டர் வெளியிட்டு, பணிகளை துவங்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை