மேலும் செய்திகள்
மொபட் வீலில் சேலை சிக்கி தவறி விழுந்த பெண் சாவு
26-Aug-2025
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடியில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நேற்று முன்தினம் மாலை, விநாயகருக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. அப்போது சிலர், நெருப்பு வளையம் அமைத்து நடனமாட, சிலை வைத்திருந்த இடத்தின் அருகில், வட்ட வடிவில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். தொடர்ந்து, பெட்ரோல் இருந்த பாட்டிலை வீசினர். அது தீப்பிடித்து விழுந்ததில், சிலை அருகில் அமர்ந்திருந்த, பெண் குழந்தைகள் பிரணிதா, 4, மோகனப் பிரியா, 4, தீப்தி, 4, ஆகியோர் காயமடைந்தனர். மூவரையும் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
26-Aug-2025