உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3 % அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3 % அகவிலைப்படி உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.கடந்த 16ம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியது. தற்போது, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், 16 லட்சம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ரூ.1,931 கோடி கூடுதலாக செலவாகும். ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Krishna Gurumoorthy
அக் 18, 2024 18:46

தனியார் தொழில் நிறுவன ஊழியர்களளுக்கும் பஞ்சபடி உண்டு.ஆனால் அதற்கு தனி விகிதாச்சாரம் வைத்து கொடுப்பார்கள். அது காதும் காதும் வைத்த மாதிரி சத்தம் இல்லாமல் வரும்.அரசு ஊழியர்கள் வாங்கும் பஞ்சபடி தான் ஊரெல்லாம் தண்டோரா போட்டு கொடுப்பார்கள்.பொது துறை நிறுவனங்கள் கதையும் வங்கி எல்ஐசி போன்ற நிறுவனங்களுக்கும் பஞ்சபடி உண்டு.


Rajarajan
அக் 18, 2024 18:39

இதற்குத்தான் இந்திய பொருளாதார மேதை திரு. மன்மோகன், தனியார்மயத்தை ஊக்குவித்தார். அதுசரி, தனியாரில் இடவொதுக்கீடு இல்லாமல், பல தொழில்நுட்பம் / மேலாண்மை பட்டம் பெற்று, தொடர்ந்து கல்வி மற்றும் காலத்திற்கேற்றவாறு திறமையை தொடர்ந்து மேம்படுத்தி, உற்பத்தியை பெருக்குவதால் தான், அரசுக்கு அவர்களால் வரி வருவாய் மூலம் அரசு ஊழியருக்கு சம்பளம் மற்றும் சலுகை கிடைக்கிறது. இல்லையேல் ?? பொருளாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் நிலைமை பற்றி அக்கறை இல்லை மற்றும் அறியும் திறன் இல்லை என்பது நன்கு புரிகிறது. அதுசரி, அரசு ஊழியர் மற்றும் உங்களின் வாரிசுகள், தனியார் பள்ளிகளில் தானே பயில்கின்றனர். பின்னர் பதிலடி தருகிறேன் என்று, வீணாக அறியாமையை / தரம் தாழ்ந்து வெளிப்படுத்தவேண்டும் ? அதுசரி, தனியாரில் இப்படி தரம் கெட்டு பதிவிட்டால் ?? அடுத்தவேளை நடுத்தெருதான். மேய்ப்பது .............. , அதில் என்ன பெருமை ??


Kannan
அக் 18, 2024 17:45

அகவிலைப்படி உயர்வு காலம்காலமாக வழங்கப்பட்டு வருவ. அரசு வரி கட்டாமல் ஏமாற்ற முடியாது.வருமானத்தை மறைக்க முடியாது.வியாபாரிகள் உள்ளிட்ட ஏனையோர் வருமானத்தை முழுமையாக காட்டுவதில்லை.


Amar Akbar Antony
அக் 18, 2024 17:34

நான் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன் மத்திய அரசை தொடர்ந்து மாநிலமும் வழங்குமென்று தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாட்டிற வர்கத்தினர்க்கு பஞ்சமல்லாமல் படியோ புடியோ இல்லை.


Rajarajan
அக் 18, 2024 16:51

இதற்கு நிதி எப்படி எங்கிருந்து மத்திய / மாநில அரசுக்கு எப்போதுமே கூடுதலாக வருகிறது ?? தனியார் மற்றும் வியாபாரிகளுக்கு இல்லாtபஞ்சம், அரசு ஊழியருக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது ?? அரசு ஊழியர் தான் நாட்டின் குடிமக்களா ?? மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்கு வரி செலுத்தும் இயந்திரங்களா ?? அப்படியெனில், நாடு பஞ்சத்தில் உள்ளதா ?? அப்படியெனில், ஏன் தேசிய / மாநில அறிவிப்பதில்லை ? மத்திய / மாநில அரசுகளுக்கு, இந்த பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தெரியவில்லையா ?? உலக பொருளாதாரத்தில், நமது நாடு முன்னேறிவிட்டதாக சொல்வதெல்லாம், வெறும் கட்டுக்கதையா ?? இந்த கூடுதல் சலுகையை அரசுகளால் தராமல் இருக்கவே முடியாதா ? இதற்கு மற்ற பொதுமக்கள் தான் விலைவாசி / வரி சுமையை தொடர்ந்து சுமக்க வேண்டுமா ? கேள்வி இங்கே, பதில் எங்கே ??


பெரிய ராசு
அக் 18, 2024 17:37

நீயும் படித்து அரசாங்க உத்தியோகத்து பொ தற்குறி வயிறு எரிந்து சகாதே , மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு ஊழியர்கள் அந்த அச்சாணி , மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தும் போது மாநிலஅரசு உயர்த்தும் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை