உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சார ஆட்டோ வாங்க பெண்களுக்கு 3 லட்சம் கடன்

மின்சார ஆட்டோ வாங்க பெண்களுக்கு 3 லட்சம் கடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மின்சார ஆட்டோ வாங்க, மகளிருக்கு, 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம், கூட்டுறவு வங்கிகளில் துவக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடன் செயல்படுகின்றன. நகைக்கடன், பயிர்க்கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடன்களை வழங்குகின்றன.முதல் முறையாக, வாகன கடன் பிரிவில், அரசு பணியாளர்களுக்கு மோட்டார் பைக், கார் வாங்குவதற்கு கடன் வழங்கும் திட்டம், கடந்த ஆண்டில் துவக்கப்பட்டது. வாகன மதிப்பில், 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில், 1,500 பேருக்கு, 2 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.தனிநபருக்கும் வாகன கடன் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மின்சார ஆட்டோ வாங்க, தலா 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 1,000 மகளிருக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மகளிருக்கு, 9 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். வாகன விலை விபரம் அடங்கிய அறிக்கை உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளை அணுகினால், கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V Venkatachalam
ஜூன் 17, 2025 11:54

எந்த திருட்டு தீய முக காரன் இந்த ஆட்டோ விற்பனை ஏஜன்சி எடுத்திருக்கான்? அல்லது எடுக்கப்போறான்? அவன் வழியா பெருங் கொள்ளைக்கு அடி போட்டாச்சு. 1000 மகளிர் யார்? கட்சிக்காரன் மனைவிகளா? முன்பே குப்பை அள்ளும் மின்சார வண்டி வாங்கி அதில் ஒரு வண்டிக்கு ரூ 20000 ஏப்பம் விட்டான்களே? அதாவது ரூ 99000 வண்டியை ரூ119000 க்கு வாங்கி ஆட்டய போட்டானுங்க.. சென்ட்ரல் கவர்மெண்ட் வரி மேல் வரி போட்டு வாங்கும் பணத்தை கொள்ளை மேல் கொள்ளையா அடிக்கிறானுங்க...வரி கட்டுபவனுக்கு போன பொங்கலுக்கு வழங்கிய வெல்லமே வழங்கப்படும்.


Rengaraj
ஜூன் 17, 2025 11:46

இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகமாவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிறது. மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும். சிறு சிறு ஊர்களுக்கும் மினிபஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தி போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். பெரிய நகரங்களில் ஆட்டோ இருக்கலாம். ஆனால் அதிக எண்ணிக்கையில் சிறு சிறு ஊர்களில் இருந்தால் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் நிரந்தர வருமானம் இருக்காது. குறைந்த தூரத்துக்கும் ஆட்டோ கட்டணம் அதிகம் இருப்பதால் ஏழை மக்கள் ஆட்டோவை பயன்படுத்தமாட்டார்கள். சிறு ஊர்களில் அவர்கள் போதிய வருமானமின்றி கஷ்டப்படுகின்றனர். எனவே அரசு ஆட்டோ கட்டணங்களை தமிழகமெங்கும் முறைப்படுத்தவேண்டும். பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் வகையில் பேருந்துகளையும் மினிபஸ்களையும் அதிகப்படுத்தவேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களது வருமானத்தை அதிகப்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றிச்செல்ல வசதியாக ஷேர் ஆட்டோ க்களை அதிகம் இயக்கவேண்டும்.


Loganathan Balakrishnan
ஜூன் 17, 2025 10:13

ஆண்களுக்கு எல்லாம் சறுக்கு வாங்கி கொடுத்துட்டு பெண்களுக்கு ஆட்டோ கொடுங்க


Natarajan Ramanathan
ஜூன் 17, 2025 09:15

வங்கிகளில் திரும்பவே வராத கடன்களில் முதன்மையானது இந்த ஆட்டோக்களுக்கு கொடுக்கும் கடன்தான்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 17, 2025 08:13

பெயர் என்னவோ மகளிருக்கு. ஆனா நடப்பு என்னவோ பெண் கவுன்சிலர்கள் போலத்தான்


அப்பாவி
ஜூன் 17, 2025 07:45

நேத்திக்கிதான் ஓடாத ஆட்டோக்களுக்கு மாசம் அன்ஹ்சாயிரம் வசூலிப்பதாக செய்தி வந்திச்சு. புதுசா எதுக்கு கடன் குடுக்குறாங்க? ஏன் கடன் வாங்குறீங்க?


R.RAMACHANDRAN
ஜூன் 17, 2025 06:42

100% கடனில் 10% கடன் ஏற்போர்த்தான் நலிந்த பிரிவினரை. இப்படிப்பட்ட நிபந்தனைகளால் ஏழைகளுக்கு கடன் கிடைப்பதில்லை. வசதியானவர்கள் தட்டிச் சென்றுவிடுகின்றனர்.


முக்கிய வீடியோ