உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது விற்பனைக்கு உடந்தை 3 போலீசார் சஸ்பெண்ட்

மது விற்பனைக்கு உடந்தை 3 போலீசார் சஸ்பெண்ட்

திருவாரூர்:சட்ட விரோதமாக மது விற்பவர்களிடம் தொடர்பில் இருந்ததாக, நன்னிலம் போலீசார், 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மதுவிலக்கு பிரிவில், காவலர்களாக பணிபுரிபவர்கள் செல்வேந்திரன், சரவணன். தனிப்பிரிவில் பணிபுரிபவர் ராஜேஷ். மூவரும், சட்டவிரோதமாக மது விற்பவர்களிடம் தொடர்பில் இருப்பதாக உயர் அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், மூவரும், சட்டவிரோத மது விற்பவர்களிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, மூவரையும், தற்காலிக பணிநீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ