உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு

3 சிறப்பு ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு

சென்னை:கோடை விடுமுறையை ஒட்டி, மூன்று சிறப்பு ரயில்களின் சேவை, ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:★ தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில், மே 12 முதல் ஜூன், 2ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்★ மதுரை - காச்சிகுடா சிறப்பு ரயில், மே, 14 முதல் ஜூன், 4ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்★ தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மே, 5 முதல், 28ம் தேதி வரையும், ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில், மே, 9 முதல், 30ம் தேதி வரையும் நீட்டித்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ