உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 13 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை: கூட்டு பலாத்காரம் செய்த 3 ஆசிரியர்கள் கைது

13 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை: கூட்டு பலாத்காரம் செய்த 3 ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவியை, அதே பள்ளியின் ஆசிரியர்கள், மூவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரின்படி, அவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவிலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி, ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை. நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு, தலைமை ஆசிரியை சென்று விசாரித்தார்.அப்போது, அதே பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், 48, சின்னசாமி, 57, பிரகாஷ், 37, ஆகியோர், தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானதால், கருக்கலைப்பு செய்ததாக அந்த மாணவி தெரிவித்தார். இதை வெளியே கூறினால் அவப்பெயர் ஏற்படும் என மறைத்ததாக, அவரது பெற்றோரும் கூறினர்.இதுகுறித்து அந்த தலைமை ஆசிரியை, குழந்தைகள் நல பாதுகாப்பு மையம், பர்கூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் அளித்தார்.பர்கூர், டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோரை, போக்சோவில் கைது செய்தனர்.தலைமையாசிரியர் புகாரின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட, மூன்று ஆசிரியர்களை விசாரித்து, வட்டார கல்வி அலுவலர்கள் அளித்த அறிக்கையின்படி, அவர்களை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் உத்தரவிட்டார்.இதையடுத்து, சந்துார் கூட்ரோடு சந்திப்பு மற்றும் பர்கூர் அருகே என, இரு இடங்களில், அந்த ஆசிரியர்களை கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை, கிருஷ்ணகிரி, ஏ.டி.எஸ்.பி., சங்கர் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தினர். 'மாணவியை சீரழித்த ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என கோஷமிட்டனர்.

இரண்டாவது கொடூரம்

கந்திகுப்பம் தனியார் பள்ளியில் கடந்த, 2024 ஆகஸ்ட் மாதம் போலி என்.சி.சி., முகாம் நடத்தி, 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் கைதான முக்கிய குற்றவாளி சிவராமன், உடல்நலக் குறைவால் இறந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.பல்வேறு பள்ளிகளில் அந்தக்குழு விசாரணை நடத்தியது. தற்போது மீண்டும் ஒரு சம்பவம், அரசு பள்ளியில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 114 )

raja
பிப் 07, 2025 06:11

இடி அமீன் ஆட்சியில் இது கூட இல்லை என்றால் எப்படி...


raja
பிப் 07, 2025 06:04

இடி அமீனின் ஆட்சி தமிழகத்தில்


Azar Mufeen
பிப் 07, 2025 03:40

அந்த மூன்று நாய்களையும் கை, கால்களை உடைத்து கண்ணாடி துகள்களை அரைத்து காமுகன்களின் உடலெங்கும் கொட்ட வேண்டும், இவன்கள் துடிப்பதை வீடியோ எடுத்து போட வேண்டும்


sivan
பிப் 07, 2025 02:20

தமிழக அரசின் வீரன் சாராயம் இரண்டு பாட்டில் அடித்து வித்து... ஏ...காவலா.. என்று பாடிய நடிகையின் ஆபாச நடனத்தை இரண்டுமுறை பார்த்தால்.. எவனுக்கும் ..தன்னுடைய பாலியல் வடிகாலாக பெண்களை தேடத்தான் சொல்லும்.. பெண்களை கையை பிடித்து இழுக்க பயம்.செருப்படி விழும்.. . மாட்டிக் கொள்வது ..ஒன்றும் அறியாத பிஞ்சு பிள்ளைகள்தான்..


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
பிப் 07, 2025 01:46

நடந்த கொடூரம் கண்டிக்கத்தக்கது. ஆனால் இந்த நாள் இதழின் வாசகர்கள் இட ஒதுக்கீட்டை குறை சொல்கிறார்கள். தீனி போட்டு வளர்த்ததை அறுவடை செய்கிறது


karupanasamy
பிப் 07, 2025 01:31

ராமசாமி நாயக்கப்பயலின் வழி வந்த கழக ஊபீசுகளிடம் என்ன எதிர்பார்க்கமுடியும். அறியா அன்னான், கயவன் தட்சிணாமூர்த்தி, ரவ்டி அய்யாதுரை கிறுக்கு கிருத்துவன் இவர்களுக்கு நாட்டாமை கொடுத்தால் நிலைமை இதுதான்.


Amar Akbar Antony
பிப் 06, 2025 23:35

அந்த தலைமை ஆசிரியைக்கு எனது நன்றிகள் மற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போல் அல்லாமல் நடவடிக்கை எடுத்த அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் அதே சமயம் குற்றம் புரிந்த இந்த ஆ சிறியர்களுக்கு மரணதண்டனை அளிக்க இந்த குழுவின் சார்பில் நீதிமன்றத்தை கோருகிறேன்.


aaruthirumalai
பிப் 06, 2025 22:57

அதே புத்தி உள்ள ஆளும் அரசு என்ன தண்டனை தரும்.


RAJ
பிப் 06, 2025 22:48

3 வாத்திகள் ...ஞ்ச்சையும் கட் பண்ணிடுங்க,,


sankaran
பிப் 06, 2025 22:07

ஆபாச சினிமாக்கள், இன்டர்நெட், யுடுபே, போர்னோகிராபி , பிரியாணி, தண்ணி, இது எல்லாம் இருக்கலாம்... ஆனால் ரேப் நடக்கக்கூடாது என்றால் எப்படி?.. சினிமா நடிகைகள் ஆபாசத்தை காட்டி கோடிகளில் பணம் சம்பாதிக்கிறாரகள்... ஒன்றும் அறியா குழந்தைகள்தான் பாதிக்கப்படுகிறாரகள்.. இந்த பாவத்தில் நடிகைகளுக்கும் பங்கு உண்டு.. சினிமா ஈடுபவனுக்கும் பங்கு உண்டு..


புதிய வீடியோ