உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30,000 விவசாய மின் இணைப்பு வழங்க அரசு அனுமதிக்காக வாரியம் காத்திருப்பு

30,000 விவசாய மின் இணைப்பு வழங்க அரசு அனுமதிக்காக வாரியம் காத்திருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கடந்த ஆண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க, அரசு அனுமதி அளித்ததில், 20,000 மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு அளிக்கப்பட்ட அவகாசம் மார்ச்சுடன் முடிவடைந்து விட்டதால், நிலுவையில் உள்ள இணைப்புகளை வழங்க, தமிழக அரசிடம் மின் வாரியம் அனுமதி கேட்டுள்ளது.தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு சாதாரண மற்றும் சுயநிதி பிரிவில் மின் இணைப்பு வழங்குகிறது. அதில், சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின் வினியோகம் ஆகிய அனைத்தும் இலவசம். சுய நிதி பிரிவில் வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் இலவசம்.மொத்தம் உள்ள 23.56 லட்சம் விவசாய இணைப்பு களுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதால், வாரியத்திற்கு ஆண்டுக்கு 7,280 கோடி ரூபாய் செலவாகிறது. இதை, தமிழக அரசு வழங்குகிறது. மின் வாரியமும், அரசும் நிதி நெருக்கடியில் உள்ளன. எனவே, ஆண்டுதோறும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. விவசாய இணைப்பு கேட்டு, 2021 மார்ச் வரை, 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இதனால், அந்த ஒரே நிதியாண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகளும்; 2022 - 23ல், 50,000 இணைப்புகளும் வழங்கப்பட்டன. கடந்த 2023 - 24ல், 50,000 இணைப்புகள் வழங்க அரசு அனுமதி அளித்தது. அதில், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில், 20,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. இதனால், மின் இணைப்பு வழங்க தேர்வான பயனாளிகள், இணைப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்து உள்ளனர்.குறிப்பாக, சுயநிதி பிரிவில், 'தத்கல்' எனப்படும் விரைவு திட்டத்தின் கீழ், வழித்தட செலவுக்கு முழு தொகையையும் செலுத்திய விவசாயிகள், மின் இணைப்பு வழங்குமாறு பொறியாளர்களிடம் தகராறு செய்து வருகின்றனர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு இறுதியில், தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால், 795 டிரான்ஸ்பார்மர், 15,000 கம்பங்கள், 985 கி.மீ., மின் கம்பி உள்ளிட்ட சாதனங்கள் சேதமடைந்ததால், விவசாய மின் இணைப்பு வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டில், 50,000 மின் இணைப்புகள் வழங்க அரசு அளித்த அவகாசம் மார்ச்சுடன் முடிந்து விட்டது. எனவே, அந்த ஆண்டில் வழங்கியது போக, மீதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்க, அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், விரைவாக மின் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ponnusamy
அக் 29, 2024 20:43

நான்30/07/2008ல் 25000ஆயிரம் சுயநிதி மின்இணைப்பு வேண்டி விண்ணப்பித்து இருந்தேன்.2021ல்இலவச மின்இணைப்பாக அரசு அறிவித்து 2013 வரை கொடுத்து உள்ளார்கள்.ஆனால் 2008ல் பதிவு செய்த எனக்கு இன்னும் வழங்கவில்லை


S Ramachandran
செப் 29, 2024 21:52

அன்பார்ந்த நிர்வாகிகளுக்கு அரசு மகாராஜா முதல் ஏழை வரை 100 யூனிட் இலவச மின்சாரம் விநியோகம் செய்யும் அளவிற்கு மின்சாரம் உள்ளது இந்நிலையில் விவசாயத்திற்கு ஏன் மின்சாரம் தடையாக உள்ளது


தமிழன்
செப் 24, 2024 12:35

2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அதே வருடத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்தது அடுத்த வருடம் 50000 மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்தது அதற்கு அடுத்த வருடம் 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்தது ஆக மொத்தம் இரண்டு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 2021 ஆம் ஆண்டு அறிவித்த ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டிய விவசாய பயனாளிகளில் நானும் ஒருவன். 2022 ஜனவரி அன்று மின் இணைப்பு வழங்குவதாக கடிதம் வந்தது அதில் ஒரு மாதத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டிருந்தனர் ஒரு மாதங்களில் ஆவணம் சமர்ப்பித்தேன் இன்று வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை இந்த நிலையில யாருக்கு இந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் மின் இணைப்புகளை கொடுத்து உள்ளனர் என்று தெரியவில்லை அரசே இதுபோல பொய்யான தகவல்களை வெளியிட்டு விவசாயிகளை ஏமாற்ற வேண்டாம்


Ethiraj
செப் 24, 2024 10:08

Free power connection to farmers given from 1967 till date. When these new connections will stop. May be 1 crore farmers demanding 2 crore connections Any Data available with govt or TNEB


Kannan
செப் 24, 2024 08:17

On an average TN government is giving ₹30,000 per year free electricity to each


Mani . V
செப் 24, 2024 05:58

இதுவே டாஸ்மாக்குக்கான அனுமதி என்றால் அடுத்த நொடியே அனுமதி கிடைத்து விடும்.


Ethiraj
செப் 24, 2024 10:25

How many fake agricultural connection are there How many units of electricity each farmer is getting Free electricity used only for farming or any other use By giving free electricity whether farm products price are under control


Kasimani Baskaran
செப் 24, 2024 05:11

விவசாயிகளின் நண்பன் தீம்கா - இதை நம்பவேண்டும். நம்பாதவர் இரத்தம் கக்கி சாவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை