உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ், தீயணைப்பு பணியாளர்கள் 3,186 பேருக்கு முதல்வர் பதக்கம்

போலீஸ், தீயணைப்பு பணியாளர்கள் 3,186 பேருக்கு முதல்வர் பதக்கம்

சென்னை: தமிழகம் முழுதும் உள்ள 3,186 காவல் மற்றும் சீருடை பணியாளர்களுக்கு, பொங்கல் பதக்கங்கள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:காவல், தீயணைப்பு, சிறைத் துறை பணியாளர்கள், தங்களது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், பொங்கல் பண்டிகையன்று, முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு காவல் துறையில், 3,000 பணியாளர்களுக்கு முதல்வரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. தீயணைப்பு துறையில், 120 பேருக்கும், சிறைத் துறையில் 60 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.பதக்கங்களை பெறுபவர்களுக்கு, நிலை வேறுபாடு இன்றி, மாதாந்திர பதக்கப்படி, 400 ரூபாய் பிப்ரவரி 1 முதல் வழங்கப்படும்.மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு, காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும், 2 நபர்கள் வீதம் 6 பேருக்கு, முதல்வரின் காவல் தொழிற்நுட்ப சிறப்பு பணி பதக்கம் வழங்கப்படும். இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, அவர்களின் நிலைகளுக்கு தகுந்தவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.பின்னர் நடக்கும் சிறப்பு பதக்க அணிவகுப்பு விழாவில், முதல்வரின் கையெழுத்துடன் கூடிய பதக்க சுருள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை