உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடந்த 16 மாதங்களில் 329 ரவுடிகளுக்கு சிறை

கடந்த 16 மாதங்களில் 329 ரவுடிகளுக்கு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நீதிமன்றங்களில் ரவுடிகள் மீதான வழக்குகளில், தீவிர கவனம் செலுத்தியதால், கடந்த 16 மாதங்களில் 329 ரவுடிகளுக்கு தண்டனை பெறப்பட்டு உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

பருந்து என்ற செயலி வாயிலாக, தமிழகத்தில் உள்ள ரவுடிகள் குறித்த முழு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் அன்றாட செயல்கள் கண்காணிக்கப்படுகின்றன.சிறையில் உள்ள ரவுடிகள் எத்தனை பேர், மாநிலம் முழுதும் தினமும் ஜாமினில் வெளி வரும் ரவுடிகள் எத்தனை பேர் என, கணக்கெடுப்பு நடத்தி, உளவுத்துறை போலீசார் வாயிலாக கண்காணித்து வருகிறோம்.சிறைகளில் சதி திட்டம் தீட்டப்படும் என்பதால், அங்கேயும் ரவுடிகளை கவனித்து வருகிறோம். நீதிமன்றங்களில், ரவுடிகள் மீதான வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது.தாமதமின்றி வழக்கு விசாரணைக்கு வேண்டிய ஆவணங்களை தாக்கல் செய்தல், தவறாது சாட்சி களை ஆஜர் செய்வது போன்றவற்றால், 16 மாதங்களில் 329 ரவுடிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அவர்களில் 150 பேருக்கு, 10 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட சிறை தண்டனை கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V Venkatachalam
மே 21, 2025 14:36

அது சரி. தேர்தல் வருதே என்ன பண்றது? ஜெயில் அறையில் இருந்து பெரிய சுரங்க பாதை போட்டுருவோமே. அது வழியா இதே ரௌடியை தேர்தல் அன்னிக்கி களமிறக்கி ஓட்டுச்சாவடி ஏரியாவில் பெரிய கலாட்டா பண்ணி ஓட்டு போட வருகிற வாக்காளர்களை பயமுறுத்திடுவோமே. அப்புறம் என்ன? நாங்க தானே ஜயிப்போம்..


Padmasridharan
மே 21, 2025 10:36

ரவுடி என்றால் ஒருத்தரை மற்றவர் ஏமாற்றி பணம் பிடுங்குதலும் அடங்கும். சில காவலர்கள் இதை ரோட்டிலும் பீச்சிலும் uniform போட்டு செய்கிறார்களே இதற்கு என்ன செய்வார்கள். வண்டி சாவி, mobileயை பிடுங்குவது, மிரட்டி அறைக்கு அழைத்து செல்வதும் கூட நடக்கிறது.


vadivelu
மே 21, 2025 10:13

குறைந்தது 700 ஓட்டுக்கள் ... போச்சே


m.arunachalam
மே 21, 2025 09:42

திருந்தி வாழ நல்ல வாய்ப்பு . அவர்களை வைத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் படிப்பினைகள் கொடுத்து புதிய ரௌடிகள் உருவாகாமல் பாடம் pugatta முயற்சிக்கலாம் .


S.V.Srinivasan
மே 21, 2025 08:56

கணக்கில் வந்தது 329 வராதது எத்தனையோ ?


மீனவ நண்பன்
மே 21, 2025 08:12

இவ்வளவு ரௌடிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு கூண்டுக்கிளிகள் போல சிறைத்தண்டனை அனுபவிப்பது நீதிமன்றங்களுக்கு பொருக்காதே ..


raja
மே 21, 2025 07:49

என்னத்த பண்ணி என்ன தினமும் கொலை கொள்ளை கற்பழிப்பு நடந்து கொண்டு தானே இருக்கு...முக்கியமா அந்த சாரும் அந்த "தம்பி"யும் வெளியில் சுகந்திரமா இருக்கும் போது இந்த ஓங்கோல் திருட்டு திராவிட கோவால் புரா கொள்ளைக்கூட்ட குடும்ப மாடல் ஆட்சியில் இதெல்லாம் குறையாது என்று தமிழர்கள் கோபத்துடன் இருக்கிறார்கள்....


Sivakumar
மே 21, 2025 07:30

Why only in the 5th year of governance? Why no preventive measures to rehabilitate such people with other employment initiatives / skill development initiatives?


அப்பாவி
மே 21, 2025 07:09

யார் யாருக்கோ பொறந்தநாள் வரப்போகுதே.. அதான் பயமாக்கீது.


Svs Yaadum oore
மே 21, 2025 06:54

சென்னையில் மட்டும் ரௌடிகள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள் ....ரோட்டில் பெண்கள் நகை பறிப்பு தினம் தினம் நடக்குது .....நாடெங்கும் கொலை கொள்ளை போதை கள்ள சாராயம் மெத்து பாலியல் குற்றம் .....இவனுங்க 16 மாதங்களில் 329 ரவுடிகளுக்கு தண்டனையாம் ....அதில் பாதி நபர்கள் ஜாமீனில் இப்போது வெளியில் இருப்பார்கள் .....


புதிய வீடியோ