உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "அது இருந்தா இது இல்ல

"அது இருந்தா இது இல்ல

வடமதுரை பேரூராட்சி 4 வது வார்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் களப்பணியாளர் புவனேஸ்வரி சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். அவருடன் பிரசாரத்திற்கு செல்லும் மகளிர் குழுவினர், அடுக்கு மொழி வசனங்களால் அசத்தி வருகின்றனர். 'வீடு இருந்தா ரோடு இல்லை;ரோடு இருந்தா சாக்கடை இல்லை; சாக்கடை இருந்தா கழிவுநீர் போக வழி இல்லை; பொன்னான வாக்குகளை அள்ளிச் சென்றவர்களுக்கு நம்ம குறை தீர்க்க நேரம் இல்லை; இனிமேலும், மனுவை ஏந்தி அலைய நமக்கு தெம்பும் இல்லை' என, 'சுரீர்' பிரசாரம் செய்கின்றனர். வழக்கமாக, மகளிர் குழுக்களை 'வளைத்து' ஓட்டுக்களை அள்ளும் கட்சிகளின் வியூகம், இங்கு பலிக்கவில்லை. சுய உதவிக்குழுவினரே நேரடியாக களம் இறங்கியுள்ளதால், கட்சி வேட்பாளர்களுக்கு லேசான கலக்கம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை