உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3,421 கிலோ கஞ்சா அழிப்பு

3,421 கிலோ கஞ்சா அழிப்பு

சென்னை:தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட, 3,421 கிலோ கஞ்சாவை போலீசார் அழித்தனர்.போதையில்லா தமிழகம் முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அழிக்கும் பணி, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு, தமிழ்நாடு சி.ஐ.டி., பிரிவு வாயிலாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, 224 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 3,421.5 கிலோ உலர் கஞ்சா, அனைத்து சட்டமுறையையும் பின்பற்றி, செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள எரி ஆலையில், நேற்று எரிக்கப்பட்டது.சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை, கடத்தல் தொடர்பாக, '10581' என்ற எண்ணிலும், 94984 10581 என்ற வாட்ஸாப் எண்ணிலும், gmail.comஎன்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம் என, அமலாக்கப் பணியகம் சி.ஐ.டி., பிரிவு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ