உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "ஆன்ராய்டு தொழில்நுட்ப பயிலரங்கு

"ஆன்ராய்டு தொழில்நுட்ப பயிலரங்கு

கோவை: நவக்கரை எஸ்.எஸ்.கே., பொறியியல் கல்லூரியில், சென்னை டெலி-லைப் டெக்., மற்றும் சி.எஸ்.ஐ., சேப்டர் நிறுவனங்கள் சார்பில் 'ஆன்ராய்டு' தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிலரங்கு நடந்தது. பயிலரங்கை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக டெலி-லைப் டெக்., நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பார்த்தசாரதி, சி.எஸ்.ஐ., சேப்டரின் அதிகாரி இம்ரான் அக்தர் கலந்து கொண்டனர். இவர்கள் ஆன்ராய்டின் முகவுரை மற்றும் வரலாறு, ஆன்ராய்டின் செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகிய தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை