உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக": இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

"காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக": இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

பொள்ளாச்சி: கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக என பொள்ளாச்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: அதிமுக மூன்றாக போய்விட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக இரண்டாகவும் போகவில்லை, மூன்றாகவும் போகவில்லை ஒன்றாக உள்ளது. அதிமுகவை உடைக்க ஸ்டாலின் எத்தனையோ அஸ்திரத்தை எடுத்தார்.

தினமும் பேட்டி

அவை அனைத்தும் தூள்தூளாக்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக வருவதற்காக, அதிமுக அரசு 30 ஆண்டு காலம் பாடுபட்டுள்ளது. புதிதாக ஒருவர் பா.ஜ., தலைவராக வந்திருக்கிறார். அவர் தினமும் பேட்டி கொடுத்து மக்களை ஈர்க்க பார்க்கிறார். அவர் விமானத்தில் ஏறும் போதும், விமானத்தில் இருந்து இறங்கும் போது பேட்டி கொடுக்கிறார். அண்ணாமலையை போல் எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

அதிமுகவை உடைக்க முயற்சி

அதிமுக தொண்டர்கள் உள்ள கட்சி, பா.ஜ., போல் தலைவர்கள் மட்டுமே உள்ள கட்சி அல்ல. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை உடைக்க ஸ்டாலின் முயற்சி செய்தார். தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெறுவோம். தமிழகத்தில் எப்போதும் பா.ஜ., ஆட்சி வர வாய்ப்பே இல்லை.பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவதால் என்ன பயன்?. பிரதமர் மோடியின் ஏமாற்று வேலைகளை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். மக்கள் ஓட்டு போடுவாங்களா?. தமிழக மக்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி, தவறு என்று எடை போட்டுப் பார்த்து தீர்ப்பு அளிப்பவர்கள் தமிழக மக்கள். இந்த ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது.

கூற முடியுமா?

மேகதாது அணையை கட்டக்கூடாது என பிரதமர் மோடியால் கூற முடியுமா?. மேகதாது அணை பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்துக்கு ஆதரவாக நியாயத்தை பேசவில்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என்று அந்த மாநில முதல்வர், அமைச்சர் கூறிய போதெல்லாம் அண்ணாமலை வாய் திறந்து பேசவில்லையே?'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை யாரும் மீறக்கூடாது' என்று நாட்டின் பிரதமர் சொன்னாரா, சொல்லவில்லை. தமிழகத்தின் பிரச்னையை மத்திய ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை.

முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,

3 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளது. 10 ஆண்டு அதிமுக ஆட்சி சாதனைகளை நான் கூறுகிறேன். 3 ஆண்டு திமுக ஆட்சி சாதனைகளை ஸ்டாலின் கூறட்டும். மக்கள் நீதிபதிகளாக இருந்து முடிவு கூறட்டும், பலமுறை சவால் விடுத்தும் முதல்வர் ஸ்டாலின் பதில் கூறாதது ஏன்?. கட்சிக்காக உழைக்காமல் முதல்வர் பதவியில் அமர்ந்த ஸ்டாலினுக்கு உழைப்பு பற்றி தெரியாது. கட்சியின் அடிமட்ட தொண்டன் என்ற நிலையில் இருந்து உழைத்து ஒவ்வொரு பொறுப்பாக பெற்று முதல்வர் ஆனால் அதன் அருமை தெரியும். உழைக்காமல் பதவிக்கு வந்த ஸ்டாலினை விட உழைத்து பதவிக்கு வந்த எனக்கு எவ்வளவு தெம்பு இருக்கும்?.

வரி சுமை

தொடர்ந்து இழிவு சொற்களை பயன்படுத்தி வந்தால் அதிமுக தொண்டர் சும்மா இருக்க மாட்டார். உழைக்காமல் பதவிக்கு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். கோவையில் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தப்படும். வீட்டு வரியை தமிழக அரசு 100 சதவீதம் உயர்த்தி உள்ளது. வரி மேல் வரி போட்டு மக்கள் மீது தமிழக அரசு சுமையை ஏற்றி உள்ளது. காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக மக்களுக்காக பா.ஜ., தலைவர்கள் குரல் கொடுப்பதில்லை.

இண்டியா கூட்டணி 'பீஸ் பீஸ்'

முதல்வர் பதவிக்கு உள்ள மரியாதையை காப்பாற்றும் வகையில் ஸ்டாலின் நடந்து கொள்ள வேண்டும். செங்கலை பார்லிமென்டில் காட்டியிருந்தால் எய்ம்ஸ் பணிகள் முடிந்திருக்கும். உதயநிதி இங்கு ஒற்றை செங்கலை காட்டி, பிரயோஜனம் இல்லை. இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று கூறிய உடனே இண்டியா கூட்டணியே பீஸ்பீஸாகப் போய்விட்டது. தேர்தல் பிரசார கூட்டங்களில் என்னை முதல்வர் ஸ்டாலின் அவதூறாக பேசி வருகிறார். உள்ளூரில் ஓணான் பிடிக்க தெரியாதவன், காட்டில் சிங்கம் மேய்க்க போகிறானா?. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக.

வெளிச்சத்தை கொடுத்த அதிமுக ஆட்சி

திமுக ஆட்சிக்கு வந்த பின், பாட்டிலும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு ரூ.10 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.300 கோடியும் வசூலாகிறது. அதிமுக ஆட்சி தமிழகத்திற்கு வெளிச்சத்தை கொடுத்த ஆட்சி. மகன் நடித்த படம் எப்படி இருக்கிறது என மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். அவருக்கு எப்படி மக்கள் பற்றி கவலை இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஏப் 11, 2024 06:38

அடுத்த சட்டசபைத்தேர்தலில் திமுககாவுடன் கூட்டணி அமைத்து அனைத்தும் நமதே என்று சொல்லி விடுவார் என்று எதிர்பார்க்கிறேன்


இவன்
ஏப் 11, 2024 05:43

அவங்க ரெண்டு பேரும் கூட்டணி இருந்த என்னடா, அதிகம் திருடுனது டீமுக தானே


S. Balakrishnan
ஏப் 11, 2024 00:32

அவர்கள் வெளிப்படையாக செய்தார்கள். நீங்கள் கமுக்கமாக செய்தீர்கள். காமராஜரின் திருச்சொற்கள் "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்".


vijai seshan
ஏப் 11, 2024 00:27

வாயை மூடவும் அப்பனா திருட்டு திமுகவுக்கு ஆதரவளிக்கணுமா அதை விட கேவல ஒன்னுமே இல்ல


முருகன்
ஏப் 10, 2024 19:37

பிஜேபி உங்களை விமர்சிப்பது இல்லை நீங்கள் அவர்களை விமர்சிப்பது இல்லை இதிலிருந்து தெரிவது கள்ள கூட்டணி இவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ